நாகர்கோவிலில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்.. 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம்!
நாகர்கோவில் : நாகர்கோவிலில் 'ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 2021' செப்டம்பர் 15ம் தேதி முதல் 30 வரை நடைபெறுகிறது. திருச்சி , கரூர், அரசியலூர், பெரம்பலூர், நெல்லை , தென்காசி , குமரி, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்பட 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதனை வருகிற 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு அலுவலகம்(திருச்சி) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்திய ராணுவ ஆள்சேர்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்
இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர்,. நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

எப்படி
இந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதனை வருகிற 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கிளர்க் வேலை
முகாமில் சிப்பாய், தொழில்நுட்ப பிரிவு சிப்பாய், விமான போக்குவரத்து தொழில்நுட்ப பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டெண்ட், கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

டோக்கன் வாங்கவும்
விண்ணப்பித்தவர்கள் செப்டம்பர் 6ம் தேதி தங்களது நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து பதிவு செய்து கொள்ளலாம். நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் அலுவலகத்திற்கு சென்று டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்கள்
இந்த டோக்கன் இருந்தால் மட்டும்தான் நாகர்கோவில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுககு திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலகம் 0431-2412254 என்ற தெலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications