பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை.. மாதம் 34 ஆயிரம் சம்பளம்! செம வாய்ப்பு.. விட்றாதீங்க!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்ன்ஷியன், பிராசஸ் ஆபரேட்டர் போன்ற பிரிவுகளில் மொத்தம் 154 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.34,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பெட்ரோலியம் உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.

நாட்டில் உள்ள 2-வது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 154 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* பிராசஸ் டெக்னிஷியன் - 60 பணியிடங்கள்
* பிராசஸ் ஆபரேட்டர் - 64
* டெக்னிஷியன் / ஆபரேட்டர் (கெமிக்கல்) - 13
* டெக்ன்ஷியன் (எலக்ட்ரிக்கல்) - 17
கல்வித் தகுதி:
கெமிக்கல் என்ஜினியரிங் / கெமிக்கல் டெக்னலாஜி, டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அவசியம். இல்லாவிடில் அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு:
தெர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.26,500 முதல் ரூ.34,000 வரை வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்க்ள் ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bharatpetroleum.in/images/files/bpcl-kr-and-mr-non-mgmt-rect-notification-july-26.pdf


Click it and Unblock the Notifications
