221 காலிப்பணியிடம்.. கைநிறைய சம்பளம்.. சென்னை மாநகராட்சியில் புதிய சூப்பர் வேலை.. அசத்தல் வாய்ப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 221 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடக்கும் நிலையில் மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தற்காலிக பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை படித்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெற முடியும். பணி தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் மொத்தம் 6 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் பணிக்கு 183 பேர், பார்மசிஸ்ட் பணிக்கு 4 பேர், லேப் டெக்னீசியன் பணிக்கு 19 பேர், எக்ஸ்ரே டெக்னிசீயன் பணிக்கு 7 பேர், ஆபரசேன் தியேட்டர் அசிஸ்டென்ட் பணிக்கு 5 பேர், ஆப்தல்மிக் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் என மொத்தம் 221 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM படிப்பை படித்திருக்க வேண்டும். பார்மசிஸ்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ பார்மசி படிப்பை முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ லேப் டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். எக்ஸ்ரே டெக்னீசியன் பணிக்கு எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆபரேசன் தியேட்டர் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ இன் ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆப்தல்மிக் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ ஆப்தல்மிக் அசிஸ்டென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். பார்மசிஸ்ட் பணிக்கு மாதம் ரூ. 15,000, லேப் டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.13,000, எக்ஸ்ரே டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ஆபரேசன் தியேட்டர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.8,400, ஆப்தல்மிக் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பம் செய்பவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 19ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதவிறக்கி செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai - 600 003, என்ற முகவரிக்கு ஜனவரி 19ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications