மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.3 லட்சம்! அழைக்கும் மத்திய அரசு பணி! விண்ணப்ப தேதி முடிய போகுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் மாத சம்பளம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.3 லட்சத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த அறிவிப்பின் சில முக்கிய விபரங்களை இச்செய்தியின் மூலம் அறிந்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

மத்திய வர்த்தக அமைச்சகத்தில் 4 பிரிவுகளில் மொத்தம் 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் யங்க் ப்ரோபஷனல் (Young Professional) பிரிவில் 22, அசோசியேட்ஸ்( Associate) பிரிவில் 19, கன்சல்டன்ட் (Consultant) பிரிவில் 15, சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant) பிரிவில் 9 என மொத்தம் 65 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 கல்வித்தகுதி என்ன?

கல்வித்தகுதி என்ன?

பணிக்கு ஏற்ப கல்வி தகுதி வேறுபாடாக உள்ளன. அதன்படி பிடெக், எல்எல்எம், எம்பிஏ, மாஸ்டர் டிகிரி ஆகியவற்றில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தது 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

 வயது வரம்பு

வயது வரம்பு

யங்க் ப்ரோபஷனல் பிரிவில் பணியாற்ற விரும்புவோர் 35 வயதுக்குள்ளும், அசோசியேட்ஸ் பிரிவில் பணியாற்ற விரும்புவோர் 45 வயதுக்குள்ளும், கன்சல்டன்ட் பிரிவில் பணியாற்றுவோர் 50 வயதுக்குள்ளும், சீனியர் கன்சல்டன்ட் பிரிவில் பணியாற்றுவோர் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 01.07.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

 சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

தேர்வாகும் நபர்களுக்கு யங்க் ப்ரோபஷனல் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம், அசோசியேட்ஸ் பணிக்கு மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.45 லட்சம், கன்சல்டன்ட் பணிக்கு மாதம் ரூ.1.45 லட்சம் முதல் ரூ.2.65 லட்சம் வரையும், சீனியர் கன்சல்டன்ட் பணிக்கு ரூ.2.65 லட்சம் முதல் ரூ.3.30 லட்சம் வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?


விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 13.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற இமெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும், விண்ணப்பம் பதிவிறக்கவும் Click Here கிளிக் செய்யுங்கள். அதோடு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பை காண Click Here செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+