மதுரை உள்பட 4 இடங்களில் வேலைவாய்ப்பு.. HCL நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு
மதுரை: தமிழ்நாட்டில் மதுரை, மகாராஷ்டிராவின் நாக்பூர், உத்தர பிரதேசத்தின் லக்னோ, விஜயவாடா உள்ளிட்ட 4 இடங்களில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணியில் சேரலாம்.
எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Graduate Trainee பிரிவில் குளோபல் சர்வீஸ டெஸ்க் (Global Service Desk) ரோல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு கலை, அறிவியல் உள்பட ஏதாவது ஒரு துறையில் இளநிலை கல்வியை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 2024,2025, 2026 ஆகிய 3 ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
கண்டிப்பாக அனைவருக்கும் கல்லூரி படிப்பில் 60 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும். அப்போது தான் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
குறிப்பாக இந்த பணியில் சேரும்போது சர்வீஸ் பாண்ட் (Service Bond) 12 மாதங்கள் வரை உள்ளது. இதனால் இண்டர்வியூவில் தேர்வாகி பணியில் சேர்ந்தால் குறைந்தபட்சம் ஓராண்டு வரை அந்த நிறுவனத்திலேயே பணியாற்ற வேண்டும். ஒருவேளை அதற்கு முன்பாக பணியை விட்டு வெளியேறினால் ரூ.50 ஆயிரத்தை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் மதுரை, உத்தர பிரதேசத்தின் லக்னோ, மகாராஷ்டிராவின் நாக்பூர், விஜயவாடா உள்ளிட்ட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை கிளிக் செய்து பூர்த்தியிட்டு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும்போது Location என்பதில் எந்த இடத்தில் பணியாற்ற விரும்புகிறமோ அதனை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இந்த அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவீர்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
