கோவில் வேலை கோடி புண்ணியம்.. எழுதப் படிக்க தெரிந்தால் போதும்! ரூ.40,000 வரை சம்பளம்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட மொத்த 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தமிழில் படிக்க எழுத தெரிந்தவர்களும் கூட இந்த பணியிடங்களுய்க்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பின் படி, சரக்கரை காப்பாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இரவு காவலர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தோட்ட பராமரிப்பாளர் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கான சம்பளம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை. தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பது போதுமானது.

கால்நடை பராமரிப்பாளர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. சம்பளம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை. தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஓதுவார் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருப்பதுடன், தேவாரப்பள்ளி வழங்கும் 3 ஆண்டு பாடப்பிரிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சுயம்பாகி பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. மாத சம்பளம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை. கோயில் வழக்கப்படி நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்கு முறைகள் குறித்த அறிவும் அவசியம்.
ஸ்ரீபாதம் தாங்கி பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டு முன் அனுபவம் அவசியம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
இந்த வேலைவாய்ப்புக்கு எந்தவிதமான விண்ணப்ப கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 12.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2026 (மாலை 5.45 மணி வரை)
விண்ணப்பிக்கும் முறை
முதலில் https://hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
எண்.315, தாங்கசாலை தெரு,
சென்னை - 600 003.
27.01.2026 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என கூறப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications