ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2017 வேலைவாய்ப்பு: 14192 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிராந்திய கிராம வங்கிகளில் உள்ள (RRBs VI) காலியிடங்கள் பொது ஆட்சேர்ப்பு செயல்முறையின் (CRP) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐபிபிஎஸ் ஆன்லைன் தேர்வு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்படும். டிசம்பர் மாதத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.07.2017 முதல் 01.08.2017 வரை விண்ணப்பிக்கலாம்.

IBPS RRB Recruitment 2017

ஐபிபிஎஸ் காலியிட விவரங்கள் : 14192

1. அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பணிக்கு : 7374 காலியிடங்கள்

2. அதிகாரி பணி ஸ்கேல் I : 4865 காலியிடங்கள்

3. அதிகாரி பணி ஸ்கேல் II (வேளாண்மை அலுவலர்) : 169 காலியிடங்கள்

4. அதிகாரி பணி ஸ்கேல் II (மார்க்கெட்டிங் அதிகாரி) : 33 காலியிடங்கள்

5. உஅதிகாரி பணி ஸ்கேல் II (கருவூல மேலாளர்): 11 காலியிடங்கள்

6. அதிகாரி பணி ஸ்கேல் II (சட்ட அலுவலர்) : 21 காலியிடங்கள்

7. அதிகாரி பணி ஸ்கேல் II (பட்டய கணக்காளர்) : 34 காலியிடங்கள்

8. அதிகாரி பணி ஸ்கேல் II (தகவல் தொழில்நுட்ப அதிகாரி) : 83 காலியிடங்கள்

9. அதிகாரி பணி ஸ்கேல் II (பொது வங்கி அலுவலர்) : 1395 காலியிடங்கள்

10. அதிகாரி பணி ஸ்கேல் III : 207 காலியிடங்கள்

வயது வரம்பு :

18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் 02-07-1989க்கு பின்னர் பிறந்தவர்களாகவும், 01-07-1999க்கு முன் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது அதற்கு சமமான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் தொடங்கும் நாள் : 12-07-2017

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி நாள் : 01-08-2017

மேலும் விபரங்களுக்கு : https://goo.gl/9s7wQo என்ற இணையதள முகவரியை அணுகவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IBPS RRB Recruitment 2017 for the post of Officers & Office Assistant for 14192 vacancies has been announced. Eligible candidates are asked to apply online for the same.
Please Wait while comments are loading...