For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த ஆண்டு 24000 இளம் பட்டதாரிகளை வேலை எடுக்க போகும் இன்போசிஸ்... சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், இந்த நிதியாண்டில் 24,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது,

இது இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு சேர்த்ததை விட 60% அதிகம். ஆகும். அதாவது இந்த ஆண்டைவிட கூடுதலாக 15,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது.

Infosys plans to hire 24,000 fresh graduates in FY 22

சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறந்து வரும் உலலாவிய இந்திய நிறுவனமான இன்போசிஸ், இந்த நிதியாண்டில் அதிக வருமானம் ஈட்டிய நிறுவனமாக மாறியுள்ளது. அனைத்தும் சரியாக நடந்தால் அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக் கூறுகையில், "இன்போசிஸ் டீம், இந்த காலாண்டில் சிறந்த உழைப்பை வழங்கியுள்ளது. டிஜிட்டல் உருமாற்றத்தை மையமாகக் கொண்ட கிளையன்ட் தொடர்புடைய யுக்திகளை செயல்படுத்துவதால் விரைவான முன்னேற்றம் வருகிறது. "

இன்போசிஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் மூன்றாவது காலாண்டை 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டை ஒப்பிடும் போது நிகர லாபம் 16.6% (YOY) உயர்ந்துள்ளது. அதாவது மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டோம். வளர்ச்சியின் வேகத்தைக் கருத்தில் கொண்டு, அதிக அளவு தேவைகள் இருக்கும் என்று நம்புகிறோம்.... வேலைப்பளுவால் மனச்சோர்வு ஏற்படக்கூடும் என்பதால், அதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு புதிய பணியமர்த்தலை 24,000 ஆக உயர்த்தியுள்ளோம், " என்றார்.

எனவே வரும் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று நம்பலாம். ஜோ பிடன் அமெரிக்க அதிபராக பதவியேறுள்ளதால் இன்போசிஸ் மட்டுமல்ல, இனி எல்லா ஐடி நிறுவனங்களுமே நல்ல முன்னேற்றம் காணும் என்று நம்பலாம்.

English summary
The second-largest IT conglomerate of the country, Infosys, is planning to hire 24,000 freshers in the next financial year that is a whopping 60% more than this year campus hirings, i.e., 15,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X