நல்ல வேலைக்கு போக ஆசையா.. விழுப்புரத்தில் நாளை இண்டர்வியூ.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் நாளை நடைபெற உள்ளதாக விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை.. அதேநேரம் தனியார்துறையில் அரசு நிறுவனங்களில் தருவதற்கு நிகராக ஊதியம் தரும் வேலைகள் இருக்கின்றன. ஏன் அரசு துறைகளைவிட அதிக சம்பளம் பெறக்கூடிய வாய்ப்பும் தனியார் துறை வேலைகளில் உள்ளது,. நன்றாக வேலையை கற்றுக்கொண்டவர்களுக்கு, தொழில்களை நன்றாக நடத்தி வாடிக்கையாளர்களை கவரக்கூடியவர்களுக்கு தற்போது நிறுவனங்கள் அதிக ஊதியம் தருவதற்கு தயாராக உள்ளன.

மிகசமார்த்தியமாக பேசக்கூடிய திறன் உடையவர்கள், தொழில்நுட்ப திறமைகள், குறிப்பிட்ட துறைகளில் நன்கு நிபுணத்துவம் உள்ளவர்களுக்கு எப்போதுமே டிமாண்ட் அதிகமாக உள்ளது. நல்ல ஊதியத்துடன் அவரவர் துறையில் சேர்ந்துவிட முடியும். அதேநேரம் தனியார் துறைகள் சார்பாக மாவட்டம் தோறும் வேலைவாய்பு முகாம்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஏற்பாடு செய்கின்றன. இந்த முகாம்களில் என்ன சிறப்பு என்றால், ஒரே ஒரு வேலை என்று இல்லாமல், ஏராளமான வேலைகளுக்கு திறமையான பணியாளர்களை நியமிக்க வேண்டிய நிறுவனங்களே பங்கேற்கின்றன. எனவே தகுதி உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பேரணி கிராமத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் றை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் உள்ள தூய இருதய கலை அறிவியல் கல்லூரியில் நாளை (பிப்ரவரி 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்துவிதமான கல்வித்தகுதியை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications