IT Jobs:மதுரையில் ஐடி வேலை.. நவம்பர் 22ல் மதுரை - சென்னையில் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து ஜாவா டெவலப்பர் (Java Developer) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மதுரை மற்றும் சென்னையில் நவம்பர் 22 (நாளை மறுநாள்) நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

hcl-hiring-for-java-developer-and-interview-to-be-held-on-november-22-in-chennai-and-madurai

அந்த வகையில் தான் தற்போது மதுரையில் உள்ள நிறுவனத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுபற்றிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர்(Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜாவா டெவலப்பர் பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் பிரைமரி ஸ்கில்லாக ஜாவா, ஸ்பிரிங் புட், மைக்ரோசர்வீசஸ், சிஐ/சிடி பைப்லைன் (CI/CD Pipeline) தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்தபணிக்கான இண்டர்வியூ நவம்பர் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ சென்னை - மதுரை என்று 2 இடங்களில் நடைபெற உள்ளது.

மதுரை என்றால் அன்றயை தினம் HCL Tech, Elcot IT Park, Airport- Mattuthavani Ring Rd, Ilandaikulam, Madurai Tamil Nadu 625 020 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். சென்னை என்றால் HCL Tech, ETA1 - Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+