IT JOBS: சென்னையில் நாளை காலையில் இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது டீம் மெம்பர்/சீனியர் டீம் மெம்பர்/ எஸ்எம்இ - வொர்க் ஃபோர்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

tcs-mega-walk-in-drive-for-work-force-administration-in-chennai-and-interview-on-december-13

இந்த பணியை பெற விரும்புவோர் கண்டிப்பாக கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் வொர்க் போர்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன், Retire புராசஸ்க்கான சிம்பிள் மற்றும் மீடியம் காம்பளக்ஸ் பேரோல் டிரான்ஸ்ரக்சனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் டேட்டா மேனேஜ்மென்ட் பேக் ஆபிஸ் ஆபரேஷனில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுவம் இருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். SAP, Success Factors Employee central, Kronos உள்ளிட்டவற்றில் பணியாற்றி இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை மற்றும் அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். ஷிப்ட் என்பது ரோட்டோஷனல் அடிப்படையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

இண்டர்வியூவுக்கு செல்வோர் கண்டிப்பாக டிசிஎஸ் ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் வைத்திருக்க வேண்டும். அதேபோல் Resume, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டடோ 2, ஆதார் அல்லது பார்ன் கார்டுகளுக்கான அசல், நகல் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 200 Feet Radial Road, MCN Nagar Extension, Thoraipakkam, Tamil Nadu 600 097 என்ற முகவரிக்கு குறித்த நேரத்துக்கு செல்ல வேண்டும். மேலும் இண்டர்வியூவுக்கு முன்பாக சம்பந்தப்பட்டோர் EPCN நம்பர் பெற வேண்டும். அந்த எண்ணை எப்படி பெறுவது என்பது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+