ரெடியா? மாதஊதியம் ரூ.29,200 டூ ரூ.2.09 லட்சம்..அக்கவுண்ட் ஆபிசர் உள்பட ஜிப்மரில் ஏராள வேலைவாய்ப்பு!
புதுச்சேரி: மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மர் (JIPMER) செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளர், சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், பர்சேஸ் ஆபிசர், சிஸ்டம் அனலிஸ்ட் உள்பட ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,200 முதல் அதிகபட்சமாக ரூ.2.09 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது. இதில் புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள ரிஜிஸ்டர், சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர், சீனியர் ஸ்டோர்ஸ் ஆபிசர், அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேசன், கம்ப்யூட்டர் ப்ரோகிராமர், பர்சேஸ் ஆபிசர், அசிஸ்டென்ட் ரிஜிஸ்டர், சூப்பிரண்ட்(சிஎஸ்எஸ்டி), ஆடியோலாஜி கம் ஸ்பீச் தெரபிஸ்ட், கம்ப்யூட்டர் டேட்டோ ப்ராசசர், போர்மென் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒருவர், சிஸ்டம் அனலிஸ்ட் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதேபோல் காரைக்கால் ஜிப்மருக்கு ரிஜிஸ்டர் பணிக்கு ஒருவர், அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேஷன் பணிக்கு ஒருவர், அசிஸ்டென்ட் பதிவாளர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ரிஜிஸ்டர் பணிக்கு மாதம் ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் சம்பளம் வழங்கப்படும். சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர், சீனியர் ஸ்டோர்ஸ் ஆபிசர், சிஸ்டம் அனலிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.67 ஆயிரத்து 700 முதல் ரூ.2.08 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேசன், கம்ப்யூட்டர்ப்ரோகிராமர், பர்சேஸ் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
அசிஸ்டென்ட் ரிஜிஸ்டர், சூப்பிரண்ட்(சிஎஸ்எஸ்டி) பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரையும், ஆடியோலாஜி கம் ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சமும், கம்ப்யூட்டர் டேட்டோ ப்ராசசர், போர்மென் பணிகளுககு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், மாஸ்டர் டிகிரி, டிப்ளமோ, டிகிரி முடித்திருப்பதோடு, மத்திய அரசு நிறுவனம், பல்கலைக்கழகம், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.jipmer.edu.in இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து மே மாதம் 29ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications