இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ள ஏராளமான வேலைவாய்ப்பு.. 18ம் தேதி சென்னையில் நேரடி நேர்காணல்
சென்னை : இந்து அறநிலையத்துறை சென்னை கொளத்தூரில் தொடங்கி உள்ள கல்லூரியில் உதவிப்பேராசிரியர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர், காவலர், அலுவலக உதவியாளர் துப்புரவு பணியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். வேலைக்கு சேர விரும்புவோர் வரும் 18ம் தேதி நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் நிர்வாகம் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி உள்ளது.
இந்து அறநிலையத்துறை இந்த கல்லூரியில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
என்னென்ன துறைகளுக்கு உதவி பேராசியர்கள் தேவை என்பதை இப்போது பார்ப்போம்: 1.B.COM, 2.BBA 3. BSC (COMPUTER SCIENCE), 4.BCA, 5.TAMIL, 6.ENGLISH, 7.MATHEMATICS, 8. PHYSICAL DIRECTOR, 9.LIBRARIAN ஆகிய துறைகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுககு உரிய கல்வி தகுதி உள்ளவர்கள் நேரடியாக வரும் 18.10.2021 அன்று காலை 10 மணிக்கு அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எஸ்ஜே அவின்யூ. கொளத்தூர் சென்னை- 99 முகவரிக்கு நேரடியாக வந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சான்றிதழ்கள் அவசியம்
குறிப்பு: இந்துக்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். வேலைக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்க வருபவர்கள் கையோடு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ்கள், மற்றும் பிஎச்டி, ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றதற்கான சான்றிதழ்கள் உள்பட படிப்பு சான்றிதழ்களை கொண்டு வாருங்கள்.

வேலைவாய்ப்பு
இதேபோல் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவியாளர் , இளநிலை உதவியாளர், காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தகுதிகள்
உதவியாளர் அல்லது நிதியாளர் பணியிடத்திற்கு பிகாம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் சீனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தட்டச்சில் தமிழில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10 மணிக்கு நேர்காணல்
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துப்புரவு பணியாளர், காவலர் பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக வரும் 18ம் தேதி கொளத்தூரில் உள்ள கல்லூரிக்கு காலை 10 மணிக்கு சென்று நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம். இந்து மதத்தினர் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications