வேலை தேடுறீங்களா.. நேரா மாதவரத்திற்கு இன்னிக்கே போங்க! ஆஃபர் லெட்டருடன் வாங்க!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை மாதவரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தமிழகம் முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சென்னை மாவட்டத்தின் 2ஆவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மாதவரத்தில் உள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால்- அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்கள், பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கலை கற்றவர்கள் என அனைத்து விதமான நபர்களும் இலவசமாக பங்கேற்கலாம்.

தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படுவோரின் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 044-24615160 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications