ஏர்போர்ட்டில் வேலை.. 1.40 லட்சம் சம்பளம்.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசின் சட்டப்பூர்வ ஆணையமாக செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு பணிகள், விமான நிலைய மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விமான நிலைய ஆணையம் செய்து வருகிறது. நாடு முழுவதும் 34 சர்வதேச விமான நிலையங்கள், 10 கஸ்டம்ஸ் விமானங்கள், 81 உள்நாட்டு விமான நிலையங்கள் என சுமார் 137 விமான நிலையங்களை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் சட்டப்பூர்வ ஆணையமாக செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) - 309 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பி.எஸ்.சி படித்து இருக்க வேண்டும். இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருப்பது அவசியம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவை கொண்ட என்ஜினியரிங் படிப்பு முடித்து இருந்தால் போதும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 24.05.2025 தேதிப்படி 27 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி / எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 32 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியிடத்திற்கு ரூ.40,000 - 3% - 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பின்னர் https://www.aai.aero/en/careers/recruitment என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, குரல் தேர்வு, மனநலன் பரிசோதனை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்; 25.04.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்; 24.05.2025 ஆகும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications