மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தில் பணி.. 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) and Data Entry Operator (DEO) போன்ற பணிகளுக்கு பல்வேறு காலியிடங்களை நிரப்பிட Combined Higher Secondary Level (10+2) Examination 2020 தேர்வை அறிவித்துள்ளது.

Jobs in SSC CHSL Recruitment 2020 with high pay

எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியையும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் வரும் டிசம்பர் 26-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதே போல் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27க்குள் இருக்க வேண்டும்.

SSC CHSL வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier- I), Descriptive Paper (Tier- II) and Skill test/ Typing Test (Tier- III) போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) பணிக்கு மாத சம்பளம் ரூ 19,900 - 63,200 வரை கிடைக்கும். Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) பணிக்கு ரூ 25,500 முதல் 81,100 வரை கிடைக்கும்.

Data Entry Operator (DEO) பணிக்கு நிலை 4க்கு 25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். நிலை 5 க்கு 29,200- ரூ 92,300 வரை கிடைக்கும். Data Entry Operator Grade A பணிக்கு ரூ 25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். Computer Based Examination (Tier- I) தேர்வானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+