8ம் வகுப்பு முடித்தாலே போதும்! ரூ.21,000 முதல் ரூ.1.51 லட்சம் மாத சம்பளம்! உளவுத்துறையில் பணி
டெல்லி: மத்திய அரசின் உளவு பிரிவில் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1.51 லட்சம் வரை சம்பளமாக பெற முடியும்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் Intelligence Bureau பிரிவு உள்ளது. இந்த பிரிவில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Intelligence Bureau பிரிவில் மொத்தம் 11 வகையான பிரிவுகளில் 766 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பிரிவு வாரியாக காலியிடங்கள் எவ்வளவு?
அதன்படி ACIO-I / Exe பிரிவில் 70 பணியிடம், ACIO-II / Exe பிரிவில் 350 பணியிடம், JIO-I / Exe பிரிவில் 50 பணியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் JIO-II / Exe பிரிவில் 100 பணியிடம், SA / Exe பிரிவில் 100, JIO-I /MT பிரிவில் 20 பணியிடம், JIO-II / MT பிரிவில் 35 பணியிடம், SA / MT பிரிவில் 20 பணியிடம், Halwai-cum-Cook 9 பணியிடம், Caretaker பிரிவில் 5 பணியிடம், JIO-II/Tech பிரிவில் 7 பணியிடம் என மொத்தம் 766 பணியிடங்கள் நிரப்ப்பபட உள்ளன.

கல்வி தகுதி என்ன?
மொத்தம் 11 வகையான பணி என்பதால் ஒவ்வொரு பணிக்கான கல்வித்தகுதி மாற்றமாகி உள்ளது. குறைந்தபட்சம் 8 முடித்தவர்கள் முதல் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். எந்த பதவிகளுக்கு எந்த வகையான படிப்பு, அனுபவம் என்பதை இச்செய்தியின் அடியில் வழங்கப்படும் லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து பயன்பெற முடியும்.

வயது வரம்பு என்ன?
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வுகளும் உண்டு. இந்த பணியானது Deputation அடிப்படையில் நிரப்ப்பபட உள்ளதால் குறைந்தபட்சம் 3 அல்லது 5 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணி நீட்டிக்கப்படும்.

மாத சம்பளம் எவ்வளவு?
ACIO-I / Exe பிரிவினருக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரையும், ACIO-II / Exe பிரிவினருக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரையும், JIO-I / Exe பிரிவினருக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையும் சம்பளமாக கிடைக்கம்.மேலும் JIO-II / Exe பிரிவினருக்கு மாதம் ரூ.25,500 முத் ரூ.81,100 வரையும், SA / Exe பிரிவினருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100ம், JIO-I /MT பிரிவினருக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100ம் JIO-II / MT பிரிவினருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100ம், SA / MT பிரிவினருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100, Halwai-cum-Cook பிரிவினருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100, Caretaker பிரிவினருக்கு ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும். JIO-II/Tech பிரிவினருக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளமாக கிடைக்கும். மேலும் குழந்தைகளின் படிப்புக்கான உதவித்தொகைககள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mha.gov.in இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கி நிரப்பி Assistant Director/G-3, Intellignece Bureau, Ministry Of Home Affairs, 35 SP Marg, Bapu Dham, New Delhi - 110021 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். வேலை தொடர்பான அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 22ம் தேதி இந்த அறிவிப்பானது உதவி இயக்குனர் அபிஜித் தாஸ் கையெழுத்துடன் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் பதிவிறக்க...
முறையான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click here என்பதை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க Click here என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க -
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு! -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications