For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர்.. 626 காலிப்பணியிடம்.. என்எல்சியில் பணி செய்ய ரெடியா?..வெளியான புது அறிவிப்பு! நல்லவாய்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியில் காலியாக உள்ள 626பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்க விண்ணப்பம் செய்வது எப்படி?, யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் ‛நவ்ரத்னா' நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் இந்தியா முழுவதும் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்று தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம்.

இந்நிலையில் தான் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 626 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கிராசுவேட் அப்ரண்டீஸ்(Graduate Apprentice) பிரிவில் 318 பணியிடங்களும், டெக்னிசீயன் (டிப்ளமோ) அப்ரண்டீஸ் (Technician (Diploma) Apprentice) பிரிவில் 308 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

 கிராசுவேட் பிரிவு பணி

கிராசுவேட் பிரிவு பணி

இதில் கிராசுவேட் அப்ரண்டீஸ் பிரிவை பொறுத்தமட்டில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 73 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 81 பேர், சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 25 பேர், இன்ஸ்ட்ரூமெண்டேசன் என்ஜினீயரிங் பிரிவில் 12 பேர், கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 9 பேர், மைனிங் என்ஜினீயரிங் பிரிவில் 42 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் 52 பேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவில் 10 பேர், பார்மசி பிரிவில் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 டெக்னீசியன் பிரிவு பணி

டெக்னீசியன் பிரிவு பணி

டெக்னீசியன் பிரிவு பணியை பொறுத்தமட்டில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 83 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 82 பேர், சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 49 பேர், இன்ஸ்ட்ரூமெண்டேசன் என்ஜினீயரிங் பிரிவில் 10 பேர், மைனிங் என்ஜினீயரிங் பிரிவில் 35 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் 40 பேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவில் 9 பேர் என தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வித்தகுதி என்ன?

கல்வித்தகுதி என்ன?

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தனித்தனி கல்வி தகுதிகள் வேண்டும். அதன்படி கிராசுவேட் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். பார்மசி பணியை பொறுமத்தமட்டில் இளங்கலை பார்மசி படிப்பு (B.Pharm) முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

இது அப்ரண்டீஸ் வகை பணி என்பதால் சம்பளத்துக்கு பதில் உதவித்தொகை (Stipend) வழங்கப்படுகிறது. அதன்படிகிராசுவேட் அப்ரண்டீஸ் பணிக்கு மாதம் ரூ.15,028, டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிக்கு மாதம் ரூ.12,524 வரை வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இது ஒரு ஆண்டு பணியாகும். விண்ணப்ப கட்டணமாக எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் வயது வரம்பை பொறுத்தமட்டில் அப்ரண்டீஸ் பணிக்கான விதிமுறை பின்பற்றப்பட உள்ளது.

 தேர்வு செய்யப்படும் முறை

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதிகாரப்பூர்வ www.nlcindia.in இணையதளம் சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜனவரி 31ம் தேதி கடைசி நாளாகும். இல்லாவிட்டால் விண்ணப்பம் படிவம் பதிவிறக்கி பூர்த்தி செய்து குறித்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டு The General Manager, Learning and Development Centre, N.L.C. India Limites, Neyveli - 607 803 என்ற தேதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களும் ஜனவரி 31ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

என்எல்சி அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

English summary
A notification has been issued to fill 626 vacancies Recruitment of Graduate Apprentices and Technician Apprentices for NLC Tamil Nadu Neyveli, Cuddalore District. How to apply for this job? Who can apply? The full details are now out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X