நெய்வேலி என்எல்சியில் வேலை.. ரூ.26,000 முதல் ரூ.1.10 லட்சம் சம்பளம்.. உடனே விண்ணப்பிக்க வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி என்எல்சி உள்பட பல்வேறு மைனிங் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் முதல் ரூ.1.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் ‛நவ்ரத்னா' நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இயங்கி வருகிறது.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பார்சிங்சார் மைன்ஸ், ஒடிசாவில் தாலாபிரா மைன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்த 3 நிறுவனங்களில் Junior Overman (Trainee), junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade - I)ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Junior Overman பிரிவில் மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாடு நெய்வேலி மைன்ஸ் நிறுவனத்தில் 46 பேர், ராஜஸ்தான் நிறுவனத்தில் 3, ஒடிசா நிறுவனத்தி்ல 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Junior Surveyor பிரிவில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நெய்வேலி நிறுவனத்தில் 13 பேர், ராஜஸ்தான், ஒடிசா நிறுவனத்தில் தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Sirdar பணிக்கு நெய்வேலி நிறுவனத்துக்கு 133 பேர், ராஜஸ்தான் நிறுவனத்தில் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
Junior Overman பணிக்கு டிப்ளமோ பிரிவில் Minig Or Mining Engineerng அல்லது அதற்கு தகுதியான படிப்படை மடித்திரக்க வேண்டும். Junior Surveyor பணிக்கு டிப்ளமோ பிரிவில் மைனிங், மைனிங் என்ஜினியரிங், மைனிங் சர்வேயிங், சிவில் என்ஜினியர் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். Sirdar பணிக்கு டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். Mining Sirdar சான்று பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
Junior Overman மற்றும் Junior Surveyor பணிக்கு ரூ.31 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Sirdar பணிக்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அதன்படி Junior Overman, Junior Surveyor பணிக்கு தேர்வாகும் நபர்களுகு்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.7.80 லட்சமும், Sirdar பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.55 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.

வயது வரம்பு என்ன?
அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது 30 ஆக உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி (பொது) பிரிவினருக்கு 10 வயது வரையும், பிடபிள்யூடி (ஓபிசி) பிரிவினருக்கு 13 வயது வரையும், பிடபிள்யூடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினருக்கு 15 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது 1.11.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.s

விண்ணப்பம் செய்வது எப்படி?
Junior Overman மற்றும்Junior Surveyor பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.595 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.295 கட்டணமாக உள்ளது. Sirdar பணிக்கு கட்டணமாக ரூ.486 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.236 கட்டணமாக உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications