For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு மாற்றியமைப்பு.. காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன.

பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஊதியம் ரூ.35,000.. தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணியிடம் காலி.. 5ம் வகுப்பு முடித்தாலே போதும்ஊதியம் ரூ.35,000.. தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணியிடம் காலி.. 5ம் வகுப்பு முடித்தாலே போதும்

ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்

ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதியன்று நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு பற்றி சிறிய கட்டுரை எழுத வேண்டி இருக்கும். மேலும் தமிழ் வாசிக்க தெரியும் என்பதை காட்டும் வகையில் சில தமிழ் பாராக்களை படித்து காண்பிக்க வேண்டி இருக்கும்.

தகுதித்தேர்வு தேதி மாற்றம்

தகுதித்தேர்வு தேதி மாற்றம்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

 டிசம்பர் 4ஆம் தேதி தகுதி தேர்வு

டிசம்பர் 4ஆம் தேதி தகுதி தேர்வு

இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிருவாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், " தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
While it was announced that the reading and writing aptitude test for the vacant posts of Village Assistant in Tamil Nadu will be held on 30th, now the date of the test has been changed due to administrative reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X