RRB Group D: ரயில்வேயில் 30 ஆயிரம் காலியிடங்கள்! தீபாவளிக்கு முன்பாக தேர்வர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ரயில்வேயில் தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த ஆர் ஆர் பி குரூப் டி (RRB Group D) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாம். 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளமே ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே துறையில் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், நல்ல சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைப்பதால், எப்படியாவது ரயில்வே வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே தேர்வுக்கு தயராகி வருகிறார்கள்.

RRB Group D 30 000 vacancies in the Indian Railways - a pleasant surprise awaits candidates before Diwali

30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

இந்த நிலையில்தான், ரயில்வே தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் குரூப் டி தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே பணிகளுக்கு ஆட்சேர்ப்பை நடத்தும் ரயில்வே தேர்வு வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. மொத்தம் 30 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஷார்ட் நோட்டீஸ் தீபாவளிக்கு முன்பாகவே வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு விரிவான தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பமே 18 ஆயிரம் சம்பளம்

குரூப் டி பணிகளை பொறுத்தவரை டிரக் மெயிண்டனர்ஸ் (தண்டவாள பராமரிப்பாளர்கள்) பாயிண்ட்ஸ்மேன் மற்றும் டெக்னிக்கல் பிற டெக்னிக்கல் அல்லாத காலியிடங்களும் அடங்கும். ஐடிஐ, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்களும் இந்த குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்பமே அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரத்திற்கு மேல் இருக்கும்.

தேர்வு முறையை பொறுத்தவரை சிபிடி எனப்படும் கணினி வழி எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவைகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பு ஆண்டு குரூப் டி பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் டிசம்பருக்கு முன்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு எப்போது

முதல் கட்ட சிபிடி தேர்வு அடுத்த ஆண்டு முதல் கலாண்டிற்குள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், தேர்வுக்கு தயராகி வரும் தேர்வர்கள் ரயில்வே வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ரயில்வே குரூப் டி தேர்வுகளில் சுமார் 22,195 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

தற்போது 7-வது ஊதிய கமிஷன் படி ரயில்வே குரூப் டி ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 8-வது பே கமிஷன் அமலுக்கு வந்த பிறகு சம்பளம் பலமடங்கு உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், ரயில்வே தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+