SBI Clerk: எஸ்பிஐ வங்கியில் கிளார்க் வேலை.. 9,124 காலியிடங்கள்! 64,000 சம்பளம்.. டிகிரி படிச்சவங்க விட்றாதீங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் (SBI Clerk job) 9,124 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1,410 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கை நிறைய சம்பளம், தமிழ்நாட்டிலேயே வேலை பார்க்க முடியும் வாய்ப்பு இருப்பதால், தேர்வகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு நடைமுறகள் என்ன? என்ற விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கியில் கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி தேர்வுகள் அல்லாமல் தனியாக தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்கிறது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ இருப்பதால், இந்த வங்கியில் பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் தேர்வர்கள் மத்தியில் இருக்கும். எஸ்பிஐ வெளியிடும் இந்த அறிவிப்புக்காக வருடக்கணக்கில் படித்து வருகிறார்கள். இந்த சூழலில்தான் தற்போது 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுடன் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் அசோசியேட்ஸ் (கஸ்டமர் & சேல்ஸ்): 9,124 பணியிடங்கள்
மாநில வாரியாக காலியிடங்கள்:
தமிழ்நாடு - 1,410 பணியிடங்கள்
குஜராத் - 360
கர்நாடகா - 760
மத்தியப் பிரதேசம் - 113
சத்தீஸ்கர் - 287
ஒடிசா - 1100
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் - 84
இமாச்சலப் பிரதேசம் - 09
லடாக் யூனியன் பிரதேசம் - 07
தெலுங்கானா - 260
ராஜஸ்தான் - 350
மேற்கு வங்கம் - 555
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 15
சிக்கிம் - 60
உத்தரப் பிரதேசம் - 250
மகாராஷ்டிரா - 1718
கோவா - 62
அருணாச்சலப் பிரதேசம் - 55
அசாம் - 110
மணிப்பூர் - 14
மேகாலயா - 24
மிசோரம் - 32
நாகாலாந்து - 27
திரிபுரா - 48
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்பாகவோ, 01.04.2006 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது. அரசு விதிகளின் வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 31 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினராக இருந்தால் 33 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு:
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு & உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது. இரண்டு கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வு மையங்களை கவனமாக தேர்வு செய்வது அவசியம்.
விண்ணப்பகட்டணம்;
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமும் ஆன்லைன் வழியில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பிற பிரிவினருக்கு ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31.08.2026 கடைசி நாளாகும்.
முதல் நிலை தேர்வு
ஆங்கிலம்: 30 மதிப்பெண்கள்
கணித திறன் (Numerical Ability): 35 மதிப்பெண்கள்
ரீசனிங்: 35 மதிப்பெண்கள்
என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
மெயின் தேர்வு
மெயின் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக தேர்வு படித்து இருந்தால் உள்ளூர் மொழித்தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Detailed_Advt_Eng.pdf


Click it and Unblock the Notifications
