மாதம் ரூ.28,000 முதல் ரூ.70,000 வரை சம்பளம்.. ‛சிட்பி’யில் வேலைவாய்ப்பு..விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

சிட்பி (SIDBI) எனும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India or SIDBI) என்பது இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்த உரிமம் மற்றும் ஒழுங்குமுறைக்கான உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.

இது உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன. இவை அனைத்தும் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்நிலையில் தான் சிட்பி (SIDBI) எனும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Assistant Manage Grade ‛A' (General Stream) பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது வரம்பானது 2022 டிசம்பர் 14ம் தேதி என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அதன்படி பார்த்தால் விண்ணப்பம் செய்பவர்கள் 14.14.1994க்கும் முன்பாகவும், 15.12.2001க்கு பிறகும் பிறந்திருக்க கூடாது.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்படி பட்ட மேற்படிப்பை Commerce, Economics, Management பிரிவில் முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பை பொறுத்தமட்டில் சட்டம் அல்லது சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் அல்லது CA, CS, CWA, CFA, CMA or Ph.d முடித்தவர்களும் விண்ணப்பம் செய்ய முடியும்.

மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.28,150-ம், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.925 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.175 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 ஜனவரி மாதம் 3ம் தேதிக்குள் www.sidbi.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

SIDBIயின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+