TCS-யில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. சென்னை - பெங்களூர் - கொச்சி - ஹைதராபாத்தில் பணி நியமனம்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கொச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
பிரபல டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் டிசிஎஸ்-சில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்பிறகு அவர்கள் ஜாவா ஸ்பிரிங் புட் டெவலப்பர்/பேக்எண்ட் டெவலப்பர் (Java Spring Boot Developer/Backend Developer) பணியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வேருக்கு ஜாவா (Java), ஸ்பிரிங்புட் (Spring Boot), மைக்ரோசர்வீசஸ் (Microservices) உள்ளிட்ட ஸ்கில்செட்டாக இருக்க வேண்டும். குறிப்பாக ஜாவா 1.8, ஸ்பிரிங், ஜேடிபிசி, servlets, jsp, struts, spring MVC மற்றும் வெப் சர்வீசஸ் தெரி்நதிருக்க வேண்டும். Agile -லில் பணியாற்ற தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Referrals-க்கு முன்உரிமை வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். அதன்பிறகு இண்டர்வியூ முறை உள்ளிட்ட பிற விவரங்கள் தெரிவிக்கப்படும். இறுதியாக காலியிடங்களை பொறுத்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications