3 பிரிவில் காலியிடங்கள்.. பிகாம் - எம்காம் - பைனான்ஸ் முடித்தவரா? டிச.,6ல் TCS-யில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள டிசிஎஸ்-ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி Procure to Pay -வில் டீம் மெம்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிகாம், எம்காம் அல்லது பைனான்ஸ் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் அக்கவுண்ட்ஸ் Payables பற்றிய புரிதல் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் திங்கிங் இருக்க வேண்டும். எக்ஸல், பவர்பாயிண்ட் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டொமைன் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். இதுதவிர Oracle தெரிந்திருப்பதோடு, இந்த பணிக்கு 1 ஆண்டு முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அடுத்ததாக Record To Report பிரிவில் டீம் மெம்பர் இந்த பணிக்கு பைனான்ஸ், பிகாம், எம்காம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ரெக்கார்ட் டூர் ரிப்போர்ட்ஸ் தெரிந்திரக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல்ஸ் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். டொமைன் பற்றிய அறிவோடு எக்ஸல், பவர்பாயிண்ட் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் 3 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
3வது நாம் பார்ப்பது Order To Cash பிரிவின் டீம் மெம்பர் பணி. இந்த பணிக்கும் பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் சார்ந்த பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். எண்ட் டூ எண்ட் பைனான்ஸ் மற்றும் O2O புராசஸ் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். அதேபோல் எம்எஸ் ஆபிஸ் வேர்ட், எக்ஸல் மற்றும் பவர்பாயிண்ட் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் இருக்க வேண்டும்.
இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்கள் அனைவரும் 24X7 என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இதனால் நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். மேலும் தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 6 ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 415/21-24, Old Mahabalipuram Road, Kumaran Nagar, Sholinganallur, Chennai, tamil Nadu - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications