Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Linkedin தந்த அதிர்ஷ்டம்.. ரூ.16 லட்சம் சம்பளத்தில் இருந்து ரூ.1.6 கோடிக்கு உயர்ந்த இன்ஜினியர்! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாம்சங் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த இன்ஜினியருக்கு லிங்க்ட்இன் மூலம் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ஒரேயொரு இண்டர்வியூ தற்போது அவரது வாழ்க்கையையே மாற்றி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் தான் படிப்பை முடித்த அந்த இன்ஜினியர் ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சிடிசியில் தற்போது சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணி உயர்வு பெற்றுள்ளார்.

தற்போது கல்லூரி படிப்பை படித்து முடிக்கும் அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலைகள் கிடைக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. தங்களுக்கு விருப்பமான பணி கிடைக்கும் வரை பலரும் கிடைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

it jobs job linkedin

ஆனால் சிலருக்கு அப்படியில்லை. தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் முதல் முயற்சியிலேயே பெரிய பெரிய நிறுவனங்களின் இண்டர்வியூக்களை ‛கிளியர்' செய்து நல்ல சம்பளத்தில் பணிக்கு செல்கின்றனர்.

மேலும் அவர்களின் ஆண்டு சம்பளமும் ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.50 கோடி என்ற அளவுக்கு உயர்ந்து அனைவரையும் வியக்க வைக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது இளைஞர் ஒருவருக்கு நடந்துள்ளது. பொதுவாக சாப்ட்வேர் இன்ஜினியர் உள்பட அனைவரும் Linkedin வலைதள பக்கத்தில் அக்கவுண்ட்டை திறந்து அதன் மூலமாக வேலை தேடுவது வழக்கம். அப்படியான ஒருவருக்கு தான் இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் Linkedin நிறுவனத்தின் இண்டர்வியூவையே கிளியர் செய்து பெரும் பேக்கேஜை சம்பளமாக பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக வைபவ் அகர்வால் என்பவர் போட்ட பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது. வைபவ் அகர்வால் முதலில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அவருக்கு ரூ.16 லட்சம் ஆண்டு சம்பளமாக வழங்கப்பட்டது. இப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் வைபவ் அகர்வால் உடன் சாம்சங் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் ஆண்டு சம்பளத்தில் பணியாற்றிய அவரது நண்பர் ஆண்டுக்கு ரூ.1.60 கோடி ஊதியம் கிடைக்கும் பணிக்கு தேர்வாகி உள்ளார்.

இதற்கு ஒரேயொரு இண்டர்வியூ தான் காரணமாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக வைபவ் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛என் நண்பர் சமீபத்தில் Linked SSE இண்டர்வியூவில் பாஸ் ஆனார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.95 லட்சம் (Rs.95 LPA)சம்பளமாக கிடைக்கிறது. அதேபோல் சிடிசி ரூ.1.60 கோடி என்ற அளவில் உள்ளது. அவர் கடந்த 2022ம் ஆண்டில் தான் ‛Ties 3 Class' வகையிலான கல்லூரியில் படிப்பை முடித்தார். என்னுடன் சாம்சங் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு இதுவரை நான் கண்டிராத மிக உயர்ந்த சம்பள உயர்வு இதுவாகும். அதிக சம்பள உயர்வுடன் உங்கள் நண்பர் தாவிய பணி எதுவென்று சொல்ல முடியுமா?'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள Linked SSE இண்டர்வியூ என்பது லிங்க்இன் நிறுவனத்தின் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கானதாகும். அதாவது வைபவ் அகர்வாலின் நண்பர் லிங்க்ட்இன் இண்டர்வியூவில் பாஸ் ஆகி ரூ.1.6 கோடி சிடிசியில் பணியில் சேர்ந்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளது. லிங்க்ட்இன் வலைதள பக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தி வருகிறது.

வைபவ் அகர்வாலின் இந்த பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் வியப்படைந்து கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். இந்த பதிவு இன்று மாலை 5 மணி நிலவரப்படிஇந்த பதிவை மொத்தமாக 79.4 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் 40 பேர் ரீபோஸ்ட் செய்துள்ளனர். 1,268 பேர் லைக் செய்துள்ளதோடு 620 பேர் ‛புக்மார்க்' செய்துள்ளனர். பலரும், அந்த நபருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+