ரூ.29 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை சம்பளம்! அழைக்கும் மத்திய அரசு பணி!அருமையான வாய்ப்பு!
டெல்லி: மத்திய அரசின் திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் ரூ.29 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயனம் (The Fertilisers And Chemicals Travancor LTD or FACT) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மூத்த மேலாளர் உள்பட ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடம்-கல்விதகுதி
திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் சீனியர் மேனேஜர்(Senior Manage) டெக்னீசியன்(Technician), ஆபிசர் சேல்ஸ்(Officer Sales) மேனேஜ்மென் ட்ரெய்னி (Management Trainee) ஆகிய பணிகளில் மொத்தம் 22 பிரிவுகளில் 137 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. கல்வித்தகுதியானது ஒவ்வொரு பதவியையும் பொறுத்து மாறுபடுகிறது. அதன்படி பொதுவாக பார்த்தால் விண்ணப்பத்தாரர்கள் பிஎஸ்சி டிகிரி, பிஎஸ்சி வேதியியல், டிப்ளமோ, எம்எஸ்சி உள்ளிட்ட பட்ட மேற்படிப்பையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
சீனியர் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வயது அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆபீசர் (சேல்ஸ்), மேனேஜ்மென்ட் டிரெய்னி ஆகிய பணிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும். டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வுகளும் உண்டு.

சம்பளம் எவ்வளவு?
சீனியர் மேனேஜர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக ரூ.29 ஆயிரத்து 100 முதல் ரூ.54 ஆயிரத்து 500 வரை கிடைக்கும். ஆபிசர் (சேல்ஸ்) பதவிக்கு ரூ.12,600 முதல் ரூ.32,500 வரை சம்பளம் கிடைக்கும். மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியில் சேருவோருக்க மாத சம்பளமாக ரூ.20 ஆயிரத்து 600 முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை கிடைக்கும். டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கும் மாதம் ரூ.9,240 முதல் ரூ.32 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.fact.co.in இணையதளம் மூலம் 29.7.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக டெக்னீசியன் பொறுப்புக்கு ரூ.590ம் பிற பணிகளுக்கு ரூ.1,180ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை Click Here கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விபரங்கள் பெற Click Here கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications