TNPSC Group 4: குரூப் 4 எழுதியிருக்கீங்களா.. தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிஎன்பிஎஸ்சி! விடையை செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் விடைக்குறிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், தேர்வு நடைபெற்று இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் குரூப் 4 க்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கூறிய நிலையில், விடைக்குறிப்பை வெளியிட்டு விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளில் டிஎன்பிஎஸ்சி முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

tnpsc-group-4-answer-key-published-on-website-surprise-for-candidates

குரூப் 4 தேர்வு Answer Key வெளியீடு

அந்த வகையில், குரூப் 4 தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11,48,019 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை.

அந்த வகையில், ஒரு இடத்திற்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவந்தது. டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று முடிந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், குரூப் 4 தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விடைகுறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key எனப்படும் விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

எந்த வினாக்களுக்கு விடையை பார்க்க வேண்டும்

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் ஆட்சேபம் இருந்தால் தேர்வர்கள் இது குறித்து முறையிட முடியும். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது பதிவு விவரங்கள், விண்ணப்ப எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, எந்த வினாக்களுக்கு விடையை பார்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை கிளிக் செய்து விடையை தெரிந்து கொள்ள முடியும்.

உத்தேச விடைகளுக்கான மறுப்புகள்/ கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய வழியில் மட்டுமே தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும். அஞ்சல், மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. அதேபோல், 28.07.2025 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

வினா எண் 90 முதல் 92 வரையுள்ள

இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு முடிவுகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும். பகுதி அ - தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா எண் 90 முதல் 92 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் வினா எண் 90- க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும்.

பகுதி அ - பொது ஆங்கிலத்தில் வினா எண் 90 முதல் 92 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் வினா எண் 90-க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் கூட முதுகலை பட்டம் படித்தவர்கள் கூட இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதை பார்க்க முடியும். இந்த முறை காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக வெளியிடப்பட்டு இருப்பதாக தேர்வர்கள் ஆதங்கம் தெரிவித்து இருந்தனர். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு பணியிடங்கள் கலந்தாய்வுக்கு முன்னர் அதிகரிக்கப்படது.

அதேபோல இந்த முறையும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் மிக கடினமாக இருந்ததாகவும் குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து வினாக்கள் எடுக்கப்பட்டதாகவும் தேர்வர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+