For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.ஏ. படித்தால் நல்ல வேலை கிடைக்குமான்னு யோசிக்கிறீர்களா.. கொட்டிக்கிடக்கிறது வாய்ப்பு.. இதோ லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: பிஏ பட்டப்படிப்பை படித்தால் நல்ல வேலை கிடைக்குமான்னு பலர் யோசிக்கும் நிலையில் தான் ஏராளமான அரசு வேலைகள் கொட்டிக்கிடக்கிறது. பிஏ பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு என்ன என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

இன்றைய காலக்கட்டத்தில் அரசு, தனியார் வேலைவாய்ப்பு என்பது சிலருக்கு மிகவும் எளிமையாக கிடைத்து விடுகிறது. இருப்பினும் சிலர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

இதனால் தான் இந்தியாவில் எப்போதும் உள்ள பிரச்சனைகளில் வேலைவாய்ப்பும் ஒன்றாக உள்ளது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது

தேடினால் வேலை உறுதி

தேடினால் வேலை உறுதி

இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்ப ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன எனவும், படிப்பை முடித்தவர்கள் தொடர்ந்து தேடி அந்த பணிக்கு முயற்சித்தால் நிச்சயம் வேலை உறுதி எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். மேலும் படிப்பை பொறுத்தமட்டில் ஒவ்வொரு பிரிவும் தனித்துவம் வாய்ந்தது. இதில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கிடையாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

பிஏ படித்தால் வாய்ப்புகள் என்ன?

பிஏ படித்தால் வாய்ப்புகள் என்ன?

இதனால் பட்டதாரிகள் ஒவ்வொருவரும் தாங்கள் படித்த படிப்பு, திறமைக்கு ஏற்ப அரசு வேலைகளை பெற முடியும். அந்த வகையில் பிஏ பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் ஏராளமான அரசு வேலைகள் உள்ளன. அதன்படி ஒருவர் பிஏ பட்டப்படிப்பை முடித்தால் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி சாதிக்கலாம். இதன்மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல்வேறு பணிகளை பெற முடியும். பிஏ படித்தவர்கள் மட்டுமின்றி டிகிரி முடித்த அனைவரும் இந்த தேர்வை எழுதலாம். இருப்பினும் கலைப்பிரிவில் (Arts) பிஏ பட்டப்படிப்பை படித்திருப்பது என்பது அவர்களுக்கு கூடுதல் வலு சேர்த்து சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதிக்க கைக்கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு துறையில்..

பாதுகாப்பு துறையில்..

மேலும் நாட்டில் உள்ள இளைஞர்களில் ஏராளமானவர்கள் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பணிகளில் சேர ஆர்வமாக உள்ளனர். இதனால் பிஏ படிப்பை முடித்தவர்கள் இதில் சேர்வதோடு என்டிஏ (NDA), சிடிஎஸ் (CDS), எப்சிஏசி (FCAT) போன்ற தேர்வுகளை எழுத முடியும். இது அவர்களுக்கான புரோமோஷனை வழங்குவதோடு மேலும் பல வசதிகளை பெற்று கொடுக்கும்.

 எஸ்எஸ்சி தேர்வு

எஸ்எஸ்சி தேர்வு

மேலும் ஸ்டாப் செலக்சன் கமிஷனும் எனும் எஸ்எஸ்சி மூலம் பிஏ பட்டதாரிகளுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. அதன்படி உதவி பிரிவு அதிகாரி (மத்திய செயலகம்), உதவி பிரிவு அதிகாரி (ரயில்வே), உதவி தணிக்கை அதிகாரி, உதவியாளர் (மத்திய விஜிலென்ஸ்), உதவி பிரிவு அதிகாரி (உளவுத்துறை பணியகம்), உதவி பிரிவு அதிகாரி (வெளிநாட்டு விவகாரங்கள்), வருமான வரி இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (மத்திய கலால்), இன்ஸ்பெக்டர் (தடுப்பு அதிகாரி), இன்ஸ்பெக்டர் (Examiner), உதவி அமலாக்க அதிகாரி (வருவாய் துறை), இன்ஸ்பெக்டர் (போதை மருந்து), ஆடிட்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய பணிகளை பெற முடியும்.

 பொதுத்துறை நிறுவனம்

பொதுத்துறை நிறுவனம்

மேலும் பொதுத் துறை நிறுவனங்களில் (PSUs) பிஏ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அதிகமான வேலைகள் உள்ளன. அதன்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC), பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) உள்பட இன்னும் சில பொதுத்துறை நிறுவனங்களில் பிஏ பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணி காத்திருக்கிறது.

வங்கி பணிகள்

வங்கி பணிகள்

மேலும் தற்போதைய காலத்தில் வங்கி பணியை அதிகமான இளைஞர்கள் விரும்புகின்றனர். இதற்கு பின்னணயில் பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில் ஆர்பிஐ (RBI) உதவியாளர், ஐபிபிஎஸ் (IBPS)அல்லது எஸ்பிஐ(SBI) ப்ரோபேஷனரி அதிகாரி மற்றும் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும். இதுதவிர பல்வேறு மாநில அரசு பணிகள், தனியார் நிறுவன பணிகளுக்கு பிஏ பட்டதாரிகள் விண்ணப்பம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A lot of government jobs are pouring in when many people think that they can get a good job by studying BA degree. In this news we have told what are the government jobs waiting for BA graduates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X