For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சியாளர் பணி ..BNYS படித்தவர்களை நியமிப்பது எப்போது? மருத்துவ சங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் BNYS எனும் ஐந்தரை ஆண்டு காலம் பட்டபடிப்புகளை முடித்தவர்களை மட்டுமே யோகா பயிற்சியாளர் என்ற தற்காலிக பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BNYS Bachelor of Naturopathy and Yogic Sciences எனும் ஐந்தரை ஆண்டுகள் படிக்கப்படும் மருத்துவ படிப்பு உள்ளது. இந்த படிப்பை கொண்டு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்.

இந்த படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருந்து வரும் நிலையில் பலர் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த படிப்பின் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏராளமானோர் இந்த பட்டப்படிப்பை படித்து முடித்து வெளியே வருகிறார்கள்.

இனி 1 வருடத்திற்கு மட்டும்தான் வொர்க் ஃப்ரம் ஹோம்? வருகிறது அதிரடி விதி.. மத்திய அரசு முடிவு? இனி 1 வருடத்திற்கு மட்டும்தான் வொர்க் ஃப்ரம் ஹோம்? வருகிறது அதிரடி விதி.. மத்திய அரசு முடிவு?

 வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

இதனால் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியலில் இளங்கலை பட்டம் படித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இதுவரை இந்த பட்டப்படிப்புகளை படித்துவிட்டு அரசின் அழைப்புக்காக காத்திருக்கும் நபர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளில் அந்த பகுதி நேர பணிக்கு BNYS படித்தவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கம்

சங்கம்

மேலும் இந்த சங்கத்தை சேர்ந்த பெயர் வெளியிடாத நிர்வாகிகள் சிலர் கூறுகையில் நாகை, கும்பகோணம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் யோகா பயிற்சியாளர் பணிக்கு குறுகிய காலம் மட்டும் கற்றுத் தரப்படும் சர்ட்டிபிகேட் கோர்ஸ் படித்தவர்களை நியமித்து வருவதை அறிகிறோம். ஐந்தரை ஆண்டுகளாக படித்து அதன் நுணுக்கங்களை கற்று தேர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் டிரெயினிங் முடித்துவிட்டு காத்திருக்கும் எங்களை விட்டுவிட்டு சர்ட்டிபிகேட் கோர்ஸ் படித்தவர்களை நியமிப்பது எந்த வகையில் நியாயம். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் நியமிப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசின் பார்வை

அரசின் பார்வை

இதை அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகள், நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள், சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள், பக்கவாதம், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை தருகிறார்கள். இவர்களுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா முடித்த பட்டதாரிகளால் தரமான சிகிச்சை அளித்து அவர்களது நோயை கட்டுப்படுத்தக் கூடிய பல யோகா சிகிச்சைகள் உள்ளன.

கோரிக்கை

கோரிக்கை

இவ்வாறிருக்கும் நிலையில் சர்ட்டிபிகேட் கோர்ஸ் படித்தவர்களை நியமிக்கப்படுவதால் ஏதாவது தவறான வழிகாட்டல் ஏற்பட்டு நோயாளியின் உடலுறுப்புகளுக்கோ உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? எனவே மேற்கண்ட மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தால் பணியில் நியமிக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் இளங்கலை படித்துவிட்டு காத்திருக்கும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

English summary
TN Yoga and Naturopathy medicine association asks about appointement of Yoga instructor jobs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X