Work From Home.. அனுபவம் இல்லாதவர்களுக்கும் அடிக்கும் ஜாக்பாட்.. மிஸ் பண்ணாதீங்க.
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் ஜூவைடெக் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
ஐடி நிறுவனங்களில் பணி செய்ய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. இப்படியான சூழலில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்து சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டது.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய பல நிறுவனங்கள் அனுமதித்த நிலையில் தற்போது நிலைமை மாறிவிட்டது. சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் Zuaitech நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது சாப்ட்வேர் டெவலப்மென்ட் கம்பெனியாகும். மொபைல் மற்றும் வெப் டெவலப்மென்ட் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது சாப்ட்வேர் டெஸ்ட்டர் (Software Developer) பிரிவில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை விரும்புவோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜில் சி, ஜாவா அல்லது பைத்தான் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். Object Oriented Programing மற்றும் Data Structures பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் டேட்டாபேஸ் கான்செப்ட்கள் மற்றும் எஸ்க்யூஎல் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த திறமைகள் இருப்பின் பணி அனுபவம் இல்லாதவர் கூட விண்ணப்பம் செய்யலாம். பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போது தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இது ஒரு Remote வகை ஜாப்பாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் உடனடியாக Zuaitech நிறுவனத்தின் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications