வாவ்... பக்கோடா சீரிஸ் ஜோக்குகளிலேயே இது அல்டிமேட் பாஸ்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பக்கோடா சீரிஸ் ஜோக்குகள்தான் இப்போது சமூக வலைதளங்களை வளைத்து வளைத்து சுழற்றிக் கொண்டுள்ளது. பக்கோடா சுட்டு விற்கும் போராட்டங்களும் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த ஜோக்கைப் பாருங்க. அதீத கற்பனையின் உச்சமாக இது இருக்கிறது. படித்துப் பாருங்க, சிரிங்க. வலைதளத்தில் வலம் வருவதுதான் இதுவும்.

Ultimate Pakoda joke

புரோக்கர்:- சார் உங்க பொண்ணுக்கு மூனு இடத்தில இருந்து ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் சார்*

எல்லாமே பெரிய இடம்தான். ஒரு பையன் MBA முடிச்சிட்டு *'திருச்சி பஸ் ஸ்டான்டுல"* பக்கோடா விற்கிறான்

இன்னொரு பையன் BE முடிச்சிட்டு *'மதுரை பஸ் ஸ்டான்டுல"* பக்கோடா விற்குறான். பையன் ரொம்ப அழகு. பாருங்க பக்கோடா தட்டோட நிற்குற போட்டோ.

மூனாவது பையனை பாருங்க MPhil முடிச்சிருக்கான். மூனுபேர்ல இவன்தான் பெரிய இடம் *'கோயம்பேடு" பஸ் ஸ்டான்டுல* சொந்தமா தள்ளு வண்டியில பக்கோடா வியாபாரம் பன்னுறான். நல்ல இடம் விட்றாதீங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன்.

அப்பா:- வைதேகி இங்க வாம்மா வந்து இதில எந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்குனு சொல்லும்மா ?

வைதேகி:- அப்பா எனக்கு இதுல யாருமே வேண்டாம்பா, நான் சுரேஸ்னு ஒரு பையனை லவ் பன்றேப்பா அவனைதான் கட்டிப்பேன் அவனும் பெரிய இடம்தாப்பா ME முடிச்சிட்டு *'திருநெல்வேலி" பேரின்பவிலாஸ்* தியேட்டர்ல சமோசா விற்கிறார்ப்பா!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The word Pakoda has become viral these days and here is a joke based on this and on rounds in Social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற