உன் சம்பளம் எவ்வளவு.. டேக் ஹோம் 35கே.. இதெல்லாம் ஒரு சேலரி.. கல்யாண மீம்ஸ்
சென்னை: ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டிய இரண்டு பெரிய சாதனைகள் என்றால், கல்யாணத்தை பண்ணிப்பாரு வீட்டை கட்டிப்பாரு என்று சொல்வார்களே அந்த இரண்டு தான்.. வீட்டை கூட கட்டிடலாம் போலே, கல்யாணம் பன்றது அவ்வளவு ஈஸி இல்லை.. அவர்களை பற்றி ஒரு மீம்ஸ் வந்துள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதாக பெரியவர்கள் சொல்வார்கள்.. இன்றைக்கு அவர்களை எல்லாம் கேட்டால் கண்டிப்பாக சொல்வார்கள் பணத்தில் தான் நிச்சயக்கப்படுகிறது என்று.. ஆம் திருமணம் என்பது ஒருவர் வாங்கும் சம்பளம், அவர் வேலை செய்யும் இடம் அல்லது அவர் வைத்துள்ள செல்வம் ஆகியவற்றை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாகவே ஒருவரது குணமும், அவரது அழகும் இருக்கிறது..

அதேநேரம் பணம் வைத்துள்ளவர்களுமே பெண் கிடைப்பது இல்லை என்று தவிப்பார்கள்.. அதற்கும் சில சிக்கல்கள் இருக்கிறது. இன்றைய பெண் வீட்டார் எதிர்பார்ப்பு என்னவென்றால், நன்றாக படித்து, நல்ல வேலையில் இருக்க வேண்டும். பெண்கள் எதிர்பார்ப்பு என்பது, நல்ல அழகாக இருக்க வேண்டும். குறைந்த வயதாக இருக்க வேண்டும். நன்றாக படித்திருக்க வேண்டும். நல்ல சம்பளம் வாங்க வேண்டும். லட்சங்களில் சம்பளம், கார், வீடு, பைக், வார விடுமுறையை கொண்டாடும் அளவிற்கு வசதி, அழகான பையன் என எல்லாவற்றையும் கேட்பதால், குறைவான சம்பளம் மற்றும் வயதானவர்கள் என்றால் திருமணம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
90களில் பிறந்த பலர் திருமணம் ஆகாமல் தவிக்கும் நிலை உள்ளது. பல 90ஸ் கிட்ஸ்கள் கல்யாணமே ஆகாமல் தவிக்க முக்கியமான காரணம். வேலையின் தன்மை, வேலை உறுதியின்மை, இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாது போன்ற காரணங்கள் தான் முன்பு இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் வந்த பின்னர், வயது ஆகிவிட்டது. இவர் வேண்டாம் என்று ஒதுக்கும் நிலை உள்ளது. 25 வயது முதல் 29 வயதுக்குள் திருமணம் செய்வது ஆண்களுக்கு நல்லதாக இருக்கிறது. அப்போது பெண் கிடைப்பது எளிது. அதேநேரம் நல்ல வேலையில் இருப்பவர்களுக்கே எளிதாக பெண் கிடைக்கும்.
தெரிஞ்ச ஒரு பையனுக்காக பொண்ணு வீட்ல போன் பேசுனேன், படிப்பு, சொத்து வெவரம் எல்லாம் கேட்டாங்க, மாச சம்பளம் 35k சென்னைல வாங்குறான்னு சொன்னேன், அது எந்த மூலைக்கு காணும்னாங்க, உங்க பொண்ணு என்ன படிச்சிருக்குனு கேட்டேன் MCAனாங்க வேலைக்கு போகுமானு கேட்டேன், மாட்டேன்னு வந்துருச்சுனாங்க https://t.co/2JuUKp2crO
— Twitaholic (@Nandhuism) December 22, 2023
கல்வி கடன், தங்கை கல்யாணத்திற்கு கடன், அக்கா கல்யாணத்திற்கு கடன், வீடு கட்டிய கடன், சீர், என பல சுமைகளை சுமக்கும் ஆண்களின் எதார்த்தமான வாழ்க்கை இஎம்ஐ இல் இருக்கும் என்பதால், அப்படி சிக்கலில் உள்ளவர்களுக்கு திருமணம் என்பது கடினமாக ஒன்றாக மாறி வருகிறது. முன்பு வரதட்சணை பிரச்சனை எப்படி பெண்களின் திருமணத்தை பாதித்ததோ அதுபோல் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகளால் பலரது திருமணம் பாதிக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் சம்பளத்திற்கே பெண் கொடுக்க யோசிக்கிறார்கள் இப்போது... https://t.co/h1cucHMIyu
— டீ (@teakkadai1) December 22, 2023
அதை பற்றி ஒரு மீம்ஸை பார்ப்போம்.. திருமணம் ஆகாத பெண் ஒருவர், ஒருஆணிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்பார். அதற்குஅவர் டேக் ஹோம் 35 ஆயிரம் என்பார். வேலைக்கே செல்லாத அந்த பெண், 35 ஆயிரம் எல்லாம் ஒரு சம்பளமா என்று நக்கலாக கேட்பார்.. இப்படியாக முடிகிறது. உண்மையில் இதுதான் எதார்த்தமாக உள்ளது. சம்பளமும், வேலையும் தான் பலரது திருமணம் மற்றும் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்பதே எதார்த்தம் .












Click it and Unblock the Notifications