புரபோஸ் பண்ண வந்தாலும் ஓரமா நின்னு பாத்துட்டு ஒதுங்கி போயிடுவாங்க..90 கிட்ஸ் மீம்ஸ்
கல்யாணம் நடக்கவே நடக்காதோ என்று பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர் 90 கிட்ஸ். அவர்களை வைத்து பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.
சென்னை: இன்றைய 2 கே கிட்ஸ்களுக்கு எல்லாமே எளிதாக கிடைத்து விடுகிறது. 90 கிட்ஸ் கிடைத்ததை கொண்டு திருப்தியாக வாழ்ந்தவர்கள். தேன் மிட்டாய் கடலை மிட்டாய் என காலம் தள்ளியவர்கள். 10 பைசா வீட்டில் கொடுத்தாலே அதை சேமித்து வைத்து வாழ்ந்தவர்கள்தான் 90 கிட்ஸ். இன்றைக்கு உள்ள 2 கே கிட்ஸ்களுக்கு 10 ரூபாய் கொடுத்தால் கூட அதை வைத்து என்ன வாங்க முடியும் என்று யோசித்து இவ்வளவுதானா என்பது போல பெற்றோர்களை லுக் விடுவார்கள். என்னதான் கலாய்தாலும் எதையும் தாங்கும் இதயம் உள்ள தங்கங்கள்தான் 90 கிட்ஸ், இன்றைக்கு மீம்ஸ் கண்டென்ட் அதிகம் கொடுப்பதும் 90 கிட்ஸ்தான். அவர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள சில மீம்ஸ்கள் நமது ஒன் இந்தியா நேயர்களுக்காக தருகிறோம்.
ஆரஞ்ச் மிட்டாய், கமர்கட், கேட்பரீஸ், பார்லி ஜி என குழந்தை பருவத்தை எளிதாக கடந்தவர்கள் 90 கிட்ஸ். அதிகமாக போனால் 5 ரூபாய் பை ஸ்டார் சாக்லேட்தான் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள். இன்றைய 2 கே கிட்ஸ்கள் குறைந்த பட்சம் 40 ரூபாய் சாக்லேட் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். சில்க் சாக்லேட் வாங்கி ஜஸ்ட் லைக் தட் வாங்கி சாப்பிடுகிறார்கள் 2 கே கிட்ஸ்.

இன்றைய 2 கே கிட்ஸ் ஹோம் ஒர்க் செய்வதற்காக மாங்கு மாங்கு என்று செய்கிறார்கள் என்றால் 90 கிட்ஸ் ஹோம் ஒர்க் எழுதாமல் போய் திங்கட்கிழமை காலையில் க்ளாஸ் ரூம் வாசலில் மண்டி போட்டுக்கொண்டு அதையும் சிரித்துக்கொண்டே தண்டனையை அனுபவித்தவர்கள்தான்.
சண்டே வந்தாலே காலையிலேயே கிரிக்கெட் விளையாட கிரவுண்ட் போய் விடுவார்கள் 90 கிட்ஸ். 2 கே கிட்ஸ் செல்போனும் கையுமாக அமர்ந்து விடுகின்றனர். பள்ளிக்கு லீவு போட என்னடா காரணம் கிடைக்கும் என்று யோசித்தவர்கள் 90 கிட்ஸ்.

ஞாயிற்றுக்கிழமையானால் டைம் டேபிள் பார்த்து பைக்குள் புக் அடுக்கி வைக்கிறவன் இல்லை 90 கிட்ஸ். திங்கட்கிழமை காலையில் லீவு போட காரணம் தேடுபவன்தான் 90 கிட்ஸ் என்ற மீம்ஸ் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
90 கிட்ஸ் லவ் பெரும்பாலும் இதயம் முரளி டைப்தான். பெண்களுக்கு சொல்லாமலேயே.. அவர்களிடம் சொல்லாமலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள். 2 கே கிட்ஸ் லவ் பெரும்பாலும் இன்ஸ்டாவில் பேசி ஒரு நாளில் ஓகே செய்து விடுவார்கள்.

பெண் பார்க்க போய் பலவிதமாக தேடி தேடி அலுத்துப்போய் கடைசியில் ஒரு பெண் வேண்டும் என்று சொல்வார்கள். உனக்கு சாக்லேட் கேர்ள் வேண்டுமா? ரக்கட் கேர்ள் வேண்டுமா என்று புரோக்கர் கேட்க எனக்கு பொண்ணு வேண்டும் அப்பாவியாக பரிதாபமாக சொல்வார்கள் 90 கிட்ஸ் பாய்ஸ். ஏனென்றால் 90 கிட்ஸ் கேர்ஸ் எல்லோரும் இப்போதைக்கு அவர்களுடைய பையன்களை கல்லூரிக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

இவனுக்கு அப்புறம் பிறந்தது எல்லாமே கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு சுத்திட்டு இருக்காணுங்க. இவனோ இன்னும் சாக்லேட் டப்பாவை தூக்கிட்டு சுத்துறான் என்று கிண்டல் மீம்ஸ் உலா வருகிறது.

எனக்கு பொண்ணு கொடுக்காம தட்டி கழிக்கிறீங்களா? இருங்க உங்க வீட்ல சீனி வெடிய போடுறேன் என்று சொல்வதும் ஒரு அப்பாவி 90 கிட்ஸ்தான். சேரில் அமர்ந்து ஸ்டைலாக கெத்தாக போட்டோ சூட் நடத்தியதும் 90 கிட்ஸ்தான்.

காதலர் தினம் வரப்போகிறது. அவர்களுக்காக இப்போது ஒரு மீம்ஸ் வலம் வருகிறது. அம்மா எனக்கு புரபோஸ் பண்ண ஒருத்தர் வரார் என்று 2 கே கிட்ஸ் பெண் சொல்ல அதற்கு அந்த எப்படி இருக்கிறார் என்று கேட்க.. 90 கிட்ஸ் அம்மா என்று அந்த பெண் சொல்ல..கவலைப்படாதே ஓரமாக நின்று பார்த்து விட்டு போய் விடுவார் என்று தைரியம் சொல்கிறார் அந்த அம்மா. என்ன 90 கிட்ஸ் இந்த சண்டேவை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications