வேட்டை ஆரம்பம்... களத்தில் இறங்கிய கமலால் ரசிகர்கள் உற்சாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகப் பகுதியில் பார்வையிட்டதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

எண்ணூர் துறைமுகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கழிவுகளை அகற்றாவிட்டால் மழைக்காலத்தில் வடசென்னைக்கு ஆபத்து என நடிகர் கமல்ஹாசன் நேற்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலையிலேயே நடிகர் கமல் துறைமுகப் பகுதியை பார்வையிட்டார்.

இதுவரை டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக களத்துக்கு சென்றுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

வாய்க்கு சக்கரை போடனும்

அக்கா தமிழிசை.. டிவிட்டர் அரசியல் நிறுத்தப்பட்டுவிட்டது. களத்தில் இறங்கியாச்சு... உங்க வாய்க்கு சக்கரை போடனும் என்கிறார் இந்த வலைஞர்..

வாழ்த்துக்கள்..

இன்று அஷ்டமி.. கமல் வேலையை இன்று ஆரம்பித்துள்ளார்.. வாழ்த்துக்கள்.. என்கிறது இந்த டிவிட்

எச் ராஜாவே போதும்

மீடியா ஆதரவு வேண்டாம்.. எச் ராஜாவே போதும் இந்த செய்தியை ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் கொண்டு செல்ல.. என்கிறார் இந்த நெட்டிசன்

வேட்டை ஆரம்பம்

வேட்டை ஆரம்பம்.... என்கிறார் இந்த வலைஞர்..

சரியான நேரம்

முன்னெடுத்து செல்ல சரியான நேரம்... என்கிறார் இந்த வலைஞர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal visted the Ennur Port area today early morning. His fans welcoms his action in the filled.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற