அடப்பாவிகளா.. நடிகர் நெப்போலியன் பார்த்தா என்ன நினைப்பாரு.. மலையோடவே மோதுறாங்களே.. மீம்ஸ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வீடியோவை நடிகர் நெப்போலியன் சார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுவும் என்ற போடாத குறைதான் பாக்கி... அந்த அளவிற்கு ஒரு மீம்ஸ் வீடியோ நெப்போலியனை பற்றி சுற்றுகிறது. அந்த வீடியோ பற்றி பார்ப்போம்.

நடிகராக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாக, பாடகராக தொழில் அதிபராகவும் இருக்கிறார் நெப்போலியன். கிழக்குச் சீமையிலே, எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த நடிகர் நெப்போலியன் தனது குழந்தை வைத்த ஒன்றை வேண்டுகோளுக்காக அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார். அங்கு விவசாயம் செய்வதோடு, பண்ணை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

Actor Napoleon latest memes video hit in social media with songs and musics with vijays movie

நடிகர் நெப்போலியனுக்கு அமெரிக்காவின் நாஷ்வில்லியில் 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. நிலத்தைச் சுற்றிக்காட்டி ஃபார்ம் டூர்' வீடியோவினை பிரபல யூடியூபரான இர்பான் இரண்டு வருடம் முன்பு வெளியிட்டார். மேலும் நெப்போலியன் வீட்டின் ஹோம் டூர்' வீடியோவை வெளியிட்டு இருந்தார். நெப்போலியன் தனது பண்ணையில் 250க்கும் மேற்பட்ட மாடுகள் வைத்திருக்கிறார். புடலங்காய், அவரைக்காய், பாகற்காய், சுரைக்காய் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி என பல்வேறு காய்கறிகளை தனது நிலத்தில் பயிரிட்டு வருகிறார். அவர் விவசாயம் குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார். கடந்த டிசம்பரில் மீனாவும் குஷ்பும் பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஆக போய் பார்த்தார்கள். அவர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் எல்லாம் வைத்து நெப்போலியன் அசத்தினார்.

நெப்போலியன் நடிப்பில் வெளியான எட்டுப்பட்டி ராசா படத்தில் வரும் பஞ்சு மிட்டாய் சீலை கட்டி பாடல் ரீமேக்ஸ் ஆக மார்க் ஆண்டனி படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாடல் அதன் பிறகு மீண்டும் பேமஸ் ஆகி உள்ளது. பலரும் ஆர்வமுடன் அவரது வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சூழலில் ட்ரோல் மன்னர்கள் புதிதாக ஒரு மீம்ஸ் வீடியோவை நெப்போலியனை வைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

போக்கிரி படத்தில் நெப்போலியன் கமிஷ்னராக நடித்திருப்பார் அல்லவா அந்த காட்சியில் மீம்ஸ் வீடியோ ஆரம்பிக்கிறது. வீடியோவில் நெப்போலியனுக்கு ஒரு சிடி வில்லன் அனுப்பி இருப்பார்கள். அந்த சிடியை பிளே செய்தால் கொடுமையான வீடியோ அனுப்பி இருப்பார்கள். அந்த மீம்ஸ் வீடியோவில் அதை உள்டா செய்து அவர் நடித்த எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்களின் பாடல்களுக்கு இப்போதைய பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளார்கள்.

இதை பார்த்து காண்டாகும் நெப்போலியன் டிவியை துப்பாக்கியால் சுடுவதுபோல் இருக்கிறது. ஒருவேளை பாட்ட மாத்தி போட்டதனால் கடுப்பாயிட்டாரோ?! என்ற கோணத்தில் அந்த வீடியோவை கேப்சனுடன் போட்டிருக்கிறார்கள். இப்போது ட்விட்டரில் இது டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+