புயலை தெறிக்க விடும் நெட்டிசன்கள்.. விவேக்கை சுண்டியிழுத்த அந்த ஒரு மீம்ஸ்!
சென்னை: நிவர் புயல் குறித்து ரன் படத்தை அடிப்படையாக வைத்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட மீம்ஸுக்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்தார்.
கடும் புயலோ, மழையோ எது வந்தாலும் மக்களுக்கு திண்டாட்டம்தான். அவர்களை பயம் சூழ்ந்து கொள்ளும். அனால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாத ஒரு கூட்டம் உண்டென்றால் அது நெட்டிசன்கள்தான்.
நிவர் வந்தால் என்ன.. இல்ல கஜா, வர்தா புயல் வந்தால் எங்களுக்கு என்ன எனக்கூறும் அளவுக்கு கடும் புயல்களை எல்லாம் தங்களது மீம்ஸ்களால் அலற வைத்து விடுகின்றனர்.

சுண்டியிழுத்த மீம்ஸ்
இதோ வந்துட்டே இருக்கேன்... என நிவர் புயல் மக்களை மிரட்டிட்டு இருக்க, நெட்டிசன்கள் அதை மீம்ஸ் மூலம் தெறிக்க விட்டு வருகின்றனர். பேஸ்புக், டுவிட்டர் என எங்க பார்த்தாலும் நிவர் மீம்ஸ் மயம்தான். இதில் ஒரு மீம்ஸ்தான் சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கை சுண்டியிழுத்துள்ளது.

ரன் படம் நினைவிருக்கா
மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படம் ரொமான்ஸுக்கு மட்டுமல்ல, விவேக்கின் காமெடிக்கு ரொம்ப பிரபலம். அந்த படம் முழுவதும் சமூக கருத்துகளுடன் விவேக் செய்யும் காமெடிக்கு வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த படத்தில் ஒரு காட்சியில் விவேக் தண்ணீர் குடிக்க குழாயை திறக்கும்பொது குடிநீர் வராமல், வெறும் காற்றுதான் வரும், இதை வைத்து காமெடி செய்திருப்பார் விவேக்.

கேதர் ஜாதவ் பாவம்
இந்த காட்சியை அடிப்படையாக வைத்து மீம்ஸ் உருவாக்கியுள்ள நெட்டிசன் ஒருவர், ''புதுசா வர்ற புயலுக்கு கேதர் ஜாதவ்னு பேர் வச்சிருந்தா அது அடிக்காமலே போயிடும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐபிஎல்லில் சோபிக்காமல் சென்னை ரசிகர்களின் கடும் கோபத்தை சம்பாதித்த இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை கிண்டல் செய்வது போல் இந்த மீம்ஸ் விவேக்கை கவர்த்திழுத்துள்ளது.

அளவே இல்லையா
இந்த மீம்ஸை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள விவேக், ''எப்போவோ நடித்த ஒரு காமெடி சீனின் படத்தை வச்சி இப்படி பின்றிங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க'' என்ற வசனத்தையும் அதில் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது உங்க சேட்டைக்கு அளவே இல்லையா என்ற அளவுக்கு நிவர் புயல் குறித்த பல்வேறு மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications