இந்த புயலுக்காவது ‘வைகைப் புயல்’னு உங்க பேரை வைப்பாங்கன்னு எதிர்பார்த்தோம்ணே.. ஏமாத்திட்டாங்க!
சென்னை : பெங்கல் புயலை மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே மாற்றி, வேறு நாட்டிற்கே ஓடிப் போக வைக்கும் அளவிற்கு மீம்ஸ்களால் அதனை கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
'இருக்கு ஆனா இல்ல.. இல்ல ஆனா இப்போ இருக்கு' என எஸ்.ஜே.சூர்யா பட டயலாக் மாதிரி போக்குக் காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது இந்த பெங்கல் புயல். முதலில் புயல் உருவாகும் என எதிர்பார்த்து அதற்கு பெங்கல் எனப் பெயர் வைத்தார்கள். ஆனால் பின்னர் அது புயலாக உருவாகாது, எனவே இனி வரும் புயலுக்குத்தான் அந்தப் பெயர் என்றார்கள்.
தற்போது மீண்டும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே புயலாகி விட்டது என திரும்பவும் அதற்கு பெங்கல் எனப் பெயர் வைத்துள்ளனர். கடந்த மாதமும் இப்படித்தான் ஒரு புயல் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என போக்குக் காட்டி விட்டு, ரைட்டில் இண்டிகேட்டரைப் போட்டுட்டு லெப்டியில் வண்டியில் திருப்புவது மாதிரி, திடீரென ஆந்திராவுக்கு ஓடி விட்டது. இப்போது இந்த பெங்கல் புயல், அந்தப் புயலையே தூக்கிச் சாப்பிடுவது போல் நமக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.
சும்மா இரண்டு தூறல் போட்டாலே நம் குறும்புக்கார மீமர்கள் மீம்ஸ் மழை பொழிய ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இருக்கையில் மீமர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த பெங்கலை சும்மா விடுவார்களா? அதனால்தான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து பெங்கலுக்கே மீம்ஸ் பொங்கல் வைத்து வருகின்றனர் நம் மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை மற்றும் பெங்கல் புயல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications