யாரும்மா கடைல.. ஐபிஎல் ஆரம்பமாகிடுச்சு.. இன்னும் 2 மாசத்துக்கு யூஸ் பண்ற மாதிரி பிபி மாத்திரை குடுங்க!
சென்னை : ஐபிஎல் தொடங்கி விட்டதை தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கொண்டாடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக தொடங்கி விட்டது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டிகளை நேரில் காண முடியாதவர்கள் வழக்கம் போல், செல்போனிலும், டிவி நேரலையிலும் கண்டு ரசித்து வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது என்றாலே, கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு பந்திலும் கை விரல் நகங்களைக் கடித்துக் கொண்டுதான், ரசிப்பார்கள். அதனால், இப்போதே இன்னும் இரண்டு மாதத்திற்கு தேவையான பிபி மாத்திரைகளை கிரிக்கெட் ரசிகர்கள் வாங்கி வைத்து விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
அதோடு, முதல்நாளான இன்றே, தங்கள் சீரியல் பாதிக்கப்படுமே என வீட்டில் உள்ளவர்கள் வருத்தப்படவும் ஆரம்பித்து விட்டதாக வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









Click it and Unblock the Notifications
