புரட்டாசி ஆரம்பமானதுகூட கவலையில்ல.. ஞாயிறும் அதுவுமா ஆரம்பிச்சிருச்சேங்கறதுதான் பெருங்கவலையா இருக்கு
புரட்டாசி மாதம் பிறந்து விட்டதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் அசைவப் பிரியர்கள்.
சென்னை: அசைவப் பிரியர்களுக்கு தமிழில் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசிதான். அதனால்தான், இன்னும் ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாதே என்ற ஆதங்கத்தை புரட்டாசி பிறந்த முதல் நாளான இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கேடு, அதனால்தான் அந்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் எவ்வளவோ யோசித்து செயல்பட்டிருக்கிறார்கள் என மூளைக்கு புரிந்தாலும், இந்த நரம்பில்லாத நாக்கிற்கு அதன் அருமை புரிவதே இல்லை. பறப்பதில் விமானத்தையும், மிதப்பதில் கப்பலையும் தவிர்த்து அனைத்தையும் சாப்பிடுவோம் என நாடி நரம்புகளில் அசைவ உணவு ருசி ஊறிய அன்பர்களுக்கு புரட்டாசி ஒரு மாதம் முழுவதும் நாக்கைக் கட்டிப் போடுவது என்பது கஷ்டமான காரியம்தான்.
ஒரு சிலர் 'எங்களுக்கு இது புரட்டாசி இல்ல.. செப்டம்பர் மாதம் தான்' என நேக்காகத் தப்பித்துக் கொண்டாலும், குடும்பத்தின் கட்டாயம் காரணமாக பலர், இந்த ஒரு மாதம் முழுவதும் அசைவ உணவின் பக்கம்கூட செல்ல முடியாத கட்டுப்பாட்டில் உள்ளனர். வேறு வழி, சாப்பிடத்தான் முடியாது.. தங்களது ஆதங்கத்தை மீம்ஸ் போட்டாவது கொஞ்சம் ஆற்றிக் கொள்வோம் என புரட்டாசி முதல்நாளான இன்றே அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டுள்ளனர்.
இதோ அப்படியான சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications