உலகில் அதிவிரைவாகக் கரைந்து காணாமல் போகும் பொருள்.. வேறென்னங்க.. சம்பளப் பணம்தான்!
மாதத்தின் முதல்நாள் என்பதால் சம்பளப் பணத்தை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: புதிய மாதம் பிறந்து விட்டது, சம்பளம் கிடைக்கும்.. ஆனால் செலவு அதற்குச் சரியாக இருக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

மாதத்தின் முதல் நாள் என்றாலே மாதச் சம்பளக்காரர்களுக்கு தானாக மனதில் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும். எவ்வளவு சம்பளம், அதற்கு என்னவெல்லாம் செலவு இருக்கிறது என்ற கணக்கையெல்லாம் தாண்டி, இன்று தனது வங்கிக் கணக்கில் அல்லது கையில் அதிக பணம் இருக்கும் என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கும்.

இஎம்ஐ, வாடகை, வீட்டுச் செலவு என சம்பளப் பணத்தைவிட நடுத்தர வர்க்கத்திற்கு செலவு அதிகம் இருக்கும். அதனால் சம்பளம் வாங்கிய அன்று, செழிப்பாக இருக்கும் வங்கிக் கணக்கு, அடுத்த நாளே பஞ்சத்திற்குப் போய் விடும். வீட்டுக்கு வீடு வாசல்படி என எல்லோருடைய வீடுகளிலும் இப்படித்தான் என்றாலும், தங்களது இந்த பஞ்சப்பாட்டை புலம்பல் மீம்ஸ்களாகப் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில ஜாலி சம்பள நாள் மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications