விடுங்க சார் நல்லா கதறட்டும்.. போன மாசம் என்னை எப்டியெல்லாம் கிண்டல் பண்ணினாங்க!
தொடரும் வெயிலின் தாக்கம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஜுன் மாதமே பாதி முடிந்து விட்டது.. ஆனால் இன்னமும் வெயில் நம்மை விட்டபாடில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீமர்கள் வெயிலையே வாட்டி எடுப்பது மாதிரியான மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர்.

கோடை காலத்தில் வெயிலையும், மழை காலத்தில் வெள்ளத்தையும் மீம்ஸ் போட்டு கலாய்ப்பது நம் மீமர்களின் வேலைகளில் ஒன்று. இந்தாண்டு மே மாதம், குறிப்பாக அக்னி நட்சத்திரக் காலம் வெயில் பற்றி அவ்வளவாக மீம்ஸ் போட முடியாதபடிக்கு மழை கொட்டித் தீர்த்து விட்டது. அதனால் அப்போது பாதியில் விட்ட வேலையை இப்போது முடிப்பதற்கு ஏதுவாக ஜுன் 15 தினங்களாகியும், இன்னமும் வெயில் ஓய்ந்தபாடில்லை.

மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியவில்லையே... ரொம்பவும் வெப்பமாக இருக்கிறதே என மே மாதத்தில் புலம்ப வேண்டிய புலம்பல்களை எல்லாம் இப்போதும் தொடர்ந்து வருகின்றனர். வீட்டில் இருப்பவர்களுக்கே இப்படி என்றால், வெளியில் செல்பவர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்.

இதோ கொளுத்தும் வெயிலை வைத்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில குளுகுளு ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...













Click it and Unblock the Notifications