பாயாசம் செய்யணும்.. காய்கறியெல்லாம் எங்கன்னு நீ கேட்டப்போ.. அப்டியே என் உடம்பெல்லாம் நடுங்கி போச்சு!
வழக்கம்போல், ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஆகி விட்டாலே, முழுக்க முழுக்க அன்றைய தினம் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால்தான் அல்லோகலப்படுகிறது சமூகவலைதளப் பக்கங்கள்.
அசைவப் பிரியர்களைப் பொறுத்தவரை, ஞாயிறு என்பது ராஜபோக விருந்துக்கான நாள் என்பதுதான் எழுதப்படாத விதி. அன்றைய தினம், சிக்கனோ, மட்டனோ அல்லது மீனோ இல்லாவிட்டால், வெறும் மொக்கையான நாளாகத்தான் கருதப்படும். அதனாலேயே அடுத்த வாரம் என்ன மெனு என்பதை இந்த வாரமே முடிவு செய்து வைத்து விடுவார்கள்.
வீட்டுத் தட்டில் மட்டும்தான் என்றில்லை.. ஞாயிற்றுக்கிழமைகளில் சமூகவலைதளத்திலும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களை பகிர்ந்தால்தான், நெட்டிசன்களுக்கு வயிறைப் போலவே மனதும் நிறையும். அதனாலேயே ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வாராவாரம் சமூகவலைதளப் பக்கங்களும் கமகமத்துக் கிடக்கிறது.
வழக்கம்போல், இந்த ஞாயிறும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ, அவற்றில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









Click it and Unblock the Notifications
