பொங்கலுக்கே 4 நாள்தான்.. ஆனா காதலர்தினத்துக்கு 7 நாளா? இப்டி வெறுப்பேத்துறீங்களேய்யா!
காதலர் தினத்தைப் பற்றிய சிங்கிள்ஸ்களின் திட்டங்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: காதலர் தினக் கொண்டாட்டத்தை தங்களுக்கு உரிய ஸ்டொமக் பர்னிங்கில் (அதாங்க வயிற்றெரிச்சலில்) எப்படியெல்லாம் கெடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்த ஐடியாக்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சிங்கிள்ஸ்.
காதலர் தினமான இன்று, காதலை நினைத்து காதலர்கள் ஒருபுறம் உருகிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து 90ஸ் கிட்ஸ் ஒருபுறம் மருகிக் கொண்டிருக்க, இந்த இரண்டு வகையிலும் சேராமல் தனி டிராக்கில் சோக கீதம் பாடி வருகிறார்கள் சிங்கிள்ஸ். கூடவே காதலர்கள் எங்கெல்லாம் சந்தித்துப் பேசுவார்களோ, அங்கெல்லாம் பாம்பு விடும் அளவிற்கு கொதித்துப் போய் இருப்பதாக ஜாலியாக மீம்ஸ் போட்டு, தங்களைத் தாங்களே கலாய்ச்சிப்பை செய்துள்ளனர்.
'பொங்கல் கொண்டாட்டமே நான்கு நாட்கள்தான்.. ஆனால் இந்தக் காதலர்கள் ஏழு நாட்கள் இப்படிக் காதலைக் கொண்டாடி வருகின்றனரே..' என காமெடி கலந்த வில்லத்தனமாக பீல் செய்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சிங்கிள்ஸ் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications