பிட்சில் படுத்தே விட்ட புஜாரா.. பழுத்து போன ஆஸி. பவுலர்கள் கை.. மீம் போட்டு நெட்டிசன்கள் கலாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே டெஸ்ட் இன்னிங்சில் 525 பந்துகளை சந்தித்து டிராவிட் படைத்திருந்த 495 பந்துகள் சாதனையை முந்தியுள்ளார்.

டிராவிட் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் 2004ல் நடந்த டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனையை ராஞ்சியில் நேற்று புஜாரா தாண்டிச் சென்றார்.

அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில்தான், புஜாரா அவுட்டானார். அல்லது, அவர் 600 பந்துகளையும் தாண்டியிருப்பார். புஜாராவின் ஆட்டத்தால் குஷியாகிவிட்டனர் இந்திய ரசிகர்கள். புஜாரா குறித்து நெட்டிசன்கள் மீம் போட ஆரம்பித்துள்ளனர்.

ஸ்மித் ரியாக்ஷன்

இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 525 பந்துகளை அசராமல் சந்தித்து சாதனைபடைத்த பிறகு, அவுட்டான நிலையில், ஆஸி.கேப்டன் ஸ்மித் ரியாக்ஷன் இப்படித்தானே இருந்திருக்கும்.

டிராவிட்டையும் தாண்டி

ராகுல் டிராவிட்டை போல ஆடலாம் என முடிவு செய்த புஜாரா, அவரையும் தாண்டி அதிக நேரம் பிட்சில் நின்று சாதித்துவிட்டதை இந்த மீம் வடிவேலு பட காமெடியுடன் ஒப்பிட்டு கூறுகிறது. ஆனால் இந்த சீனுக்கு அந்த நிகழ்வு சரியாக பொருந்தலியே பாஸ்.

அம்மா, நான்தான் புஜாரா

வெயில் திரைப்படத்தில், சிறு வயதில் காணாமல் போன கதாப்பாத்திரம் பெரியாளான பிறகு வீடு திரும்பி வந்து அம்மாவிடம் அறிமுகம் செய்யும். இப்போது புஜாராவும் அப்படி பலவருடங்களாக பிட்சிலேயே நின்றுவிட்டார் என ஜாலியாக சொல்கிறது இந்த மீம்.

கை வலி

விராட் கோஹ்லி கையில் காயம் ஏற்பட்டதை மேக்ஸ்வெல் கேலி செய்ததாக நினைக்க வேண்டாம், அவர் தனது அணி பந்து வீச்சாளர்கள், புஜாராவுக்கு பந்து வீசி கை பழுக்க போவதைதான் சிம்பாலிக்காக கூறியுள்ளார் என கலாய்க்கிறது இந்த டிவிட்.

பார்ட்னர்ஷிப்

புஜாரா மற்றும் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா கொடுத்த லட்சுமணன்-டிராவிட் பாணி பார்ட்னர்ஷிப்பை வைத்து கலாய்க்கிறது இந்த மீம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Many memes on the roaund about India-Australia test series.
Please Wait while comments are loading...