ஐயர் பரம்பரையில் ஒரு ரவுடி.. சுருளி தனுஷாக மாறிய ஸ்ரேயாஸ் ஐயர்.. ரசிகர்களின் மிரட்டும் மீம்ஸ்!
சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்துள்ள நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.
ஜகமே தந்திரம் படத்தில் நடிகர் தனுஷ், "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" என்று உற்சாகமாக சொல்லுவார். அதில் வரும் தனுஷை அப்படியே ஸ்ரேயாஸ் ஐயராக மாற்றி, "ஐயர் பரம்பரையில் ஒரு ரவுடி ஐயர்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நான்தான்டா கிங்கு மொமண்ட். இதுவரை ஆடிய 2 போட்டிகளில் 2 அரைசதங்களை விளாசி அதிரடியான ஃபார்மில் இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

புதுசு திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் வடிவேலு, திரும்ப திரும்ப பேசுற நீ என்று ஒருவரை பைத்தியமாகவே மாற்றிவிடுவார். அதில் வரும் வடிவேலுவை ரிஷப் பண்ட்-ஆகவும், லக்னோ உரிமையாளர் கொயங்காவை பைத்தியகாரராகவும் மாற்றி, "திரும்ப திரும்ப என்ன டென்ஷன் பண்ற நீ" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் பைத்தியமாகிட்டான் மொமண்ட்.

கில்லி படத்தில் விஜயை பார்த்து அவரின் அப்பாவான ஆஷிஷ் வித்யார்த்தி, "நானும் பார்த்திட்டுதான்டா இருக்கேன்.. நீ எப்போ அந்த 4 அரியர் பேப்பரையும் எழுதி முடிக்கப் போறனு" என்று சொல்வார். இதில் வரும் விஜயாக ரிஷப் பண்ட்-ஐயும், அப்பாவாக ஆஷிஷ் வித்யார்த்தியையும் மாற்றி, நானும் பார்க்கிறேன்டா.. நீ எப்போ இந்த ஐபிஎல் சீசன்ல ரன் அடிக்கப் போறனு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்ட பங்கு மொமண்ட்.

லக்னோ அணிக்காக ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் 17 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனை உதய கீதம் படத்தில் கவுண்டமணியை கோர்த்துவிடும் செந்திலுடன் ஒப்பிட்டு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கவுண்டமணியாக கொயங்காவையும், செந்திலாக ரிஷப் பண்ட்-ஐயும் மாற்றி, வாங்கின ரூ.27 கோடியை என்னதான்டா பண்ணின.. என்று கேட்க, அதற்கு ரிஷப் பண்ட், புதுசா ஒரு கார் வாங்கி இருக்கேன்.. வாங்களேன் ஒரு ரைடு போய்கிட்டே பேசலாம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதெல்லாம் எனக்கு தேவையா மொமெண்ட்.













Click it and Unblock the Notifications