ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணைக்கூட நம்பு.. ஆனா, சிஎஸ்கேவை மட்டும் நம்பாதே!
சென்னை : ஐபிஎல் தொடர் என்றாலே வழக்கமாக ஆர்சிபியைத் தான் மீம்ஸ் கண்டெண்ட்டாக்கி கலாய்ப்பது நம் மீமர்களின் வழக்கம். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக அந்த அணி நன்றாக விளையாடி வர, சிஎஸ்கே மீம்ஸ்களுக்கான கண்டெண்ட்டாகி விட்டது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்குப் பிரியமான அணிகள் விளையாடும்போது, அந்த அணிகளை வாழ்த்தி சமூகவலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிடுகின்றனர். அதேபோல், தங்களுக்குப் பிடிக்காத அணிகளைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிரவும் அவர்கள் மறப்பதில்லை.
வழக்கமாக இந்த மீம்ஸ்களில் அதிகம் வறுபடுவது ஆர்சிபியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வருடமும், 'ஈ சாலா கப் நமதே' என அவர்கள் சொன்னதை வைத்தும், ஆனால் தொடர்ந்து அவர்கள் தோல்வியைத் தழுவுவதை வைத்தும் மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்து தள்ளி விடுவார்கள்.
ஆனால், இந்த முறை மற்ற அணி ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆர்சிபி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்காக, மீம்ஸ் போடுவதற்கு கண்டெண்ட் இல்லையே என மீமர்கள் வருத்தப் படக்கூடாது என நினைத்தோ என்னவோ, ஆர்சிபிக்குப் பதில் சிஎஸ்கே தங்களது சொதப்பலான ஆட்டங்களால் கண்டெண்ட் கொடுத்து வருகிறது.
பிறகென்ன வழக்கம் போல், ஆர்சிபியை மீம்ஸ் வண்டியில் இருந்து இறக்கி விட்டு, சிஎஸ்கேவை வண்டியில் ஏற்றி விட்டனர் நம் நெட்டிசன்கள். இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால், சிஎஸ்கே விளையாடாத நாட்களில்கூட, அதைப் பற்றிய மீம்ஸ்கள்தான் அதிகம் கண்ணில் படுகின்றன.
"ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணைக்கூட நம்பு.. ஆனா, சிஎஸ்கேவை மட்டும் நம்பாதே!" என்றும், "முன்னாடி துருப்பிடிச்ச வீரர்களை எங்க பட்டறைல பட்டை தீட்டுவோம்.. இப்போ எங்க பட்டறையே துருப்பிடுச்சிடுச்சே!" என்றும், "மத்த டீம்லாம் சியர்ஸ் கேர்ள்ஸை எப்டி வேலை வாங்குறாங்க.. நாங்கலாம் மாதரைப் போற்றும் சிஎஸ்கேங்க!" என்றும் விதவிதமான மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications