புதுகாலண்டர் வாங்கி ஒரு தேதியைக்கூட கிழிக்கல.. அதுக்குள்ள அண்ணன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாரு!
சென்னை: புத்தாண்டு தினமான நேற்றே, ஜப்பானில் நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை என அடுத்தடுத்து வெளியான செய்திகளை வைத்து, 'இப்போவே ஆரம்பிச்சிட்டியா?' என 2024ம் ஆண்டை மீம்ஸ் போட்டு திட்டத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு ஆண்டுமே, அந்த ஆண்டு முடியும் போது, 'இந்த ஆண்டே பரவாயில்லை என வரும் ஆண்டு சொல்ல வைக்காமல் இருந்தாலே போதும்' என்பதுதான் மக்களின் புத்தாண்டு பற்றிய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். கடந்தாண்டும் இப்படித்தான், '2023ம் ஆண்டே பரவாயில்லை என சொல்ல வச்சிடாத' என 2024ம் ஆண்டிடம் வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வந்தனர் சமூகவலைதளங்களில்.
ஆனால், புத்தாண்டு தினமான நேற்றே ஜப்பானில் நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை என ஊடகங்களில் செய்திகள் வெளியாக, 'இன்னும் புதுக்காலண்டர்ல ஒரு தேதியைக் கூட கிழிக்கலை.. அதுக்குள்ளயே இப்டி ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டயே' என மீம்ஸ் போட்டு புலம்பத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.
தங்களது கவலைகளையெல்லாம், கொஞ்சம் நகைச்சுவை கலந்நு அவர்கள் மீம்ஸ்களாக்கி உள்ளனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications