'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
சென்னை: எப்ப பாரு கீபோர்டப் பாரு கீபோர்டப் பாரு ன்னு மெசேஜ் போட்டுக் கொல்றானுங்க..சத்தமாக் கத்தணும் போல இருக்கு..என்னன்னு? தெரியனுமா, கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாருங்க என்று டாக்டர் ஒருவர் போட்ட மீம்ஸ் வைரலாகி வருகிறது. பலரும் கீ போர்டு மீம்ஸ் போட்டு நெட்டிசன்களை வெறுப்பேற்றி வருகிறார்கள்.
யாரை பார்த்தாலும் கடந்த ஒரு வாரமாக கீ போர்டில் இந்த எழுத்துக்கும், இந்த எழுத்துக்கும் இடையில் பாருங்க என்று கேள்வி பதிலாக போஸ்ட் போடுகிறார்கள். இந்த கீ போர்டு போஸ்ட்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்ற பாணியில் இருக்கிறது. யாரை பார்த்தாலும் கீ போர்டில் ட்விஸ்ட் வைத்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்..

இதை பார்த்து நொந்து போன டாக்டர் லோகநாதன் என்பவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், "எப்ப பாரு கீபோர்டப் பாரு கீபோர்டப் பாரு ன்னு மெசேஜ் போட்டுக் கொல்றானுங்க..சத்தமாக் கத்தணும் போல இருக்கு.. என்னன்னு?! கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு" என்று கூறியள்ளார். அதாவது Io என்று கூறியுள்ளார். அதாவது ஐயோ என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் அதை பார்த்து இதெல்லாம் பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது என்று கிண்டலாக கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசனோ இவங்க செய்வதை எல்லாம் பார்க்கும் போது, f;க்கு jவுக்கு நடுவில் போய் படுக்க வேண்டும் என்று இருப்பதாக கூறியுள்ளார். இதாவது gh இல் போய் படுக்க வேண்டும் என்பது போல் இருப்பதாக கிண்டல் செய்துள்ளார்.
இதனிடையே கீ போர்டு மீம்ஸ் பார்த்து கடுப்பான பல நெட்டிசன்கள்,, நான் கீ போர்டு பயன்படுத்தறது இல்ல டா வெறும் வாய்ஸ் நோட் தான் என்று கூறி வருகிறார்கள். இதேபோல் இந்த கீபோர்டு ட்விட்டை எல்லாம் டைன்லைன்ல கொண்டுவராதீங்கயா.. வெறியாகுது என்றும் கூறுகிறார்கள்.. அட கீபோர்டு மண்டயனுகளா… நசநசன்னு அனத்தாம கெடங்கடா என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதேபோல் ஒரு நெட்டிசன் எப்பா டேய் நானெல்லாம் கீபோர்டு பாக்காமலேயே டைப் அடிப்பேன், இன்னிக்கு நூறு முறை பார்க்க வைச்சிட்டீங்க என்று கவுண்டமனி பாணியில் கேள்வி எழுப்பி உள்ளார்.
'
இதனிடையே திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா வெளியிட்ட பதிவில், உலகை மாற்றும் ஆற்றல் யாருக்கு இருக்கிறது தெரியுமா❔❔❔ உங்க கீபோர்ட் ல Q கும் R கும் நடுவில் பாருங்க என்று கூறினார். அதில் பார்த்தால் we என்று உள்ளது. அதாவது நாம் என்று உள்ளது.. இதையும் பார்த்தும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தமிழில் மட்டுமல்ல, இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் இந்த கீ போர்டு கேள்விகள் கடந்த ஒரு வாரமாக தாருமாறாக போய் கொண்டிருக்கிறது. ட்விட்டர் தளமே, தாங்க முடியலை குருநாதா என்ற அளவிற்கு கீ போர்டு கேள்விகள் இருக்கிறது. இந்த டிரெண்ட் எப்போது ஓயும் என்று தான் தெரியவில்லை...


-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications