மனைவி தங்கம் மாதிரி! நீயா நானா கணவர் தந்த "ட்விஸ்ட்".. இந்த பொண்ணை போய் "அடிச்சிட்டோமே"! பரபர மீம்ஸ்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் பேசியதற்காக கிண்டல் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக தற்போது பல மீம்ஸ்கள் இணையத்தில் போடப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கணவன் vs கணவனை விட அதிகம் வருமானம் ஈட்டும் மனைவிமார்களுக்கு இடையில் இன்றைய விவாதம் நடைபெற்றது. இன்றைய விவாதத்தை கோபிநாத் கையாண்ட விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த விவாதம் இணையம் முழுக்க கவனம் பெற்றது. இதில் வந்த ஆண் ஒருவரை அவரின் மனைவி.. குழந்தைக்கு மார்க் சீட்டில் கையெழுத்து போட்டால் என் கணவர் அப்செட் ஆகிவிடுவார்.

கணவர்
என் கணவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனாலும் அவர் மார்க் சீட்டை 1 மணி நேரம் பார்க்கிறார் என்று கூறினார். இதற்கு அந்த கணவர்.. என்னால் படிக்க முடியவில்லை, நான் செய்ய முடியாத சாதனையை என் மகள் செய்கிறார். அதனால் பார்க்கிறேன் என்று விளக்கம் கொடுத்தார். இதற்கு பதில் அளித்த மனைவி என் கணவருக்கு எதுவுமே தெரியாது. அவருக்கு மார்க் சீட்டில் என்ன இருக்கிறது என்றே தெரியாது. அவர் 1 மணி நேரம் ஏன் இதை பார்க்க வேண்டும், அவருக்கு ஏபிசிடி கூட தெரியாது என்று கிண்டலாக கூறினார். இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களை போட்டனர்.

அவமானம்
இணையம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக அந்த மனைவிதான் டிரெண்டிங்கில் இருந்தார். ஆனால் டிவியில் அந்த பெண் கணவனை அவமானப்படுத்தியது போல தோன்றினாலும் நிஜத்தில் அந்த பெண் தனது கணவனுக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது அவர் சமீபத்தில் கொடுத்த பல்வேறு பேட்டிகளின் மூலம் தெரிய வந்தது. பேட்டி ஒன்றில் அந்த கணவர் பேசுகையில், எனக்கு கிட்னி பிரச்சனை. நான் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். வாரத்திற்கு ரெண்டு முறை டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நரம்பில் ஊசி
எனக்கு நரம்பில் ஊசி போடுவார்கள். மாதம் 20-25 ஆயிரம் ரூபாய் இதற்கு செலவாகும். என் மனைவிதான் இதற்கு செலவு செய்கிறார். என் மனைவி தங்கம் மாதிரி. நாங்கள் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம். அந்த நேரத்தில் என் மனைவி விளையாட்டாக பேசியது தவறாக புரிந்துகொண்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர். எனக்கு அது வருத்தமாக இருக்கிறது. தவறாக மீம்ஸ் போடுகிறார்கள்.

கிண்டல்
நாங்கள் இப்படி ஜாலியாக கிண்டல் செய்வது வழக்கம். அவர்கள் மீம் போடுவது போல என் மனைவி கிடையாது என்று அந்த கணவர் விளக்கமாக குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் தற்போது இணையத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக மீம்ஸ் போடப்பட்டு வருகிறது. அந்த பெண்ணை தவறாக புரிந்து கொண்டுவிட்டோம் என்று கூறி பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். ச்சா கணவனுக்காக இப்படி கஷ்டப்பட்டு உழைக்கும் பெண்ணை போய் தவறாக பேசிவிட்டோமே என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

வைரல்
மூன்று நாட்களாக வைரல் ஆன குடும்பத்தின் பின்னால் எவ்வளவு பெரிய வலி உள்ளது.இதையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள வருவதே ஒரு பெரிய மனவலிமை.உடல் நலன் பெற பிரார்த்திக்கிறேன் என்று இவர் குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் பலர் டிவியில் இரண்டு நிமிடத்தில் ஒருவரை பார்த்து நாம் எடை போட்டுவிட கூடாது. அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. இப்போது பாருங்கள் உண்மையே வேறு மாதிரி இருக்கிறது என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

புருஷன்
இன்னும் சிலர் புருஷனை வீட்ல உட்காரவச்சி சோறு போட்டு அவரோட டயாலிசிஸ் செலவையும் பார்த்துக்குற தங்கத்தை வீக்கெண்டுக்கு வாகா சிக்குனாங்கன்னு போட்டு அடிச்சிட்டீங்களேடா படுபாவிகளா.. சாரிங்க மன்னிச்சிடுங்க மேடம், என்று மீம்ஸ் போட்டுள்ளனர். அவர் மிகவும் தங்கமான பெண் என்று அவரின் கணவரும் கூறியது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக மீம்ஸ் போட்டு வருகின்றன.

கிண்டல்
இது போக இன்னும் சிலரோ.. அதே நிகழ்ச்சியில் பெண்ணுக்கு எதிராக பேசிய ஆண்களும் இருந்தனர். பாத்திரம் கழுவ வேண்டும் என்று தனது மனைவி வேலையை விட சொன்ன நபர் இருக்கிறார். ஆனால் அவரை பற்றி எல்லாம் யாரும் பேசுவது இல்லை. அவரை பற்றி எல்லாம் மீம்ஸ் யாரும் போடுவது இல்லை. பெண்கள் என்றால் இவர்கள் கிண்டல் செய்கிறார்கள், என்று கிண்டல் செய்துள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications